ரொம்ப கம்மி விலையில் 65 நாட்களுக்கு அசத்தல் BSNL திட்டம்
BSNL Most Affordable Prepaid Plan: BSNL தற்போது மலிவான ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, இதன் வேலிடிட்டி காலம் 65 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் விலை மற்றும் பிற நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...
BSNL பல ப்ரீபெய்ட் திட்டங்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. BSNL இல் விலை உயர்ந்த திட்டம் முதல் மலிவான திட்டங்கள் வரை அனைத்து வகையான திட்டங்களும் உள்ளன. பிஎஸ்என்எல்லின் 4ஜி நெட்வொர்க் சில இடங்களில் நேரலையில் உள்ளது. அதேபோல் சில திட்டங்களில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் இன்டர்நெட் வசதியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் BSNL தற்போது மலிவான ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது, இதன் வேலிடிட்டி காலம் 65 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் விலை 319 ரூபாய் ஆகும். இதில் பல சரவெடி பலன்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்...
பிஎஸ்என்எல் ரூ. 319 ப்ரீபெய்ட் பேக்
பிஎஸ்என்எல் ரூ.319 காலிங் பேக்குடன் வருகிறது. இந்த திட்டத்தில் 65 நாட்கள் செல்லுபடியாகும். இது டெல்லி மற்றும் மும்பை MTNL ரோமிங் வட்டங்கள் உட்பட அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தேசிய ரோமிங்கை வழங்குகிறது. இந்த திட்டத்தில், 10 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் 65 நாட்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | itel A60 மொபைல் போனின் விலை வெறும் 5999 ரூபாய் மட்டுமே! சூப்பர் கைப்பேசி அறிமுகம்
அதாவது, திட்டத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலான செல்லுபடியாகும். இது தவிர, 4G அல்லது 2G/3G இருப்பிடத்தில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பு வாய்ந்தது. குறைந்த விலையில் அதிக நாட்கள் செல்லுபடியாகும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது.
டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் உண்டு
பிஎஸ்என்எல் ரூ.319-ஐ அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மட்டுமே வழங்கும் ஒரு திட்டமென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 10ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டா மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும்.
பிஎஸ்என்எல் டேட்டா பலனைக் குறைத்து கட்டணத்தை அதிகரித்து வருகிறது. நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான நைட் அன்லிமிடெட் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மையை ஒரு நாளைக்கு 5ஜிபியிலிருந்து 3ஜிபியாகக் குறைத்துள்ளது, மற்ற எல்லா நன்மைகளையும் அப்படியே வைத்திருக்கிறது.
மேலும் படிக்க | Disney+ Hotstar பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஏப்ரல் முதல் இந்த வசதி கிடைக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ