Ola Electric Scooter vs Simple One: இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் பல விதங்களில் சிறப்பம்சம் வாய்ந்ததாக இருந்தது. மின்சார வாகன சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா மின்சார ஸ்கூட்டரும், சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. இவை இந்தியாவின் ஆட்டோமொபைல் சூழலில் பல நேர்மறையான மாற்றங்களை அறிமுகம் செய்யும் என நம்பப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் இரண்டும் இந்த பிரிவுக்கான நவீன தொழில்நுட்பங்களையும் அம்சங்களையும் அளிக்கின்றன. இவற்றின் விலையும் மிக குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஒரு புறம், தனது எஸ் 1 மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) மூலம் பெரிய அளவிலான பரபரப்பை ஓலா ஏற்படுத்தியது. மறுபுறம், சிம்பிள் எனர்ஜி ஸ்கூட்டர் ஒரு சார்ஜில் 236 கிமீ தூர பயணம் என்ற அசாத்திய வரம்பை அளிக்கின்றது.


ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 மற்றும் சிம்பிள் ஒன் இடையே ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வை இங்கே காணலாம்:


ALSO READ: Ola electric scooters: ஷோரூமில் எப்போ கிடைக்கும்; முழு விவரம்!  


ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 மற்றும் சிம்பிள் ஒன்னின் முன்பதிவு கட்டணம்


- ஓலா எலக்ட்ரிக் நிறுவன வாடிக்கையாளர்கள் ரூ. 499 செலுத்தி ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம்.
- மறுபுறம், சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் முன்பதிவு கட்டணம் ரூ. 1947 ஆகும். நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை முன்பதிவு விலையாக வைத்துள்ள சிம்பிள் ஒன் நிறுவனம், முன்பதிவில் தேசபக்தியை கலந்துள்ளது.


ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் ஒன்: வரம்பு ஒப்பீடு


ஓலா எலக்ட்ரிக் (Ola Electric Scooter) முழு சார்ஜில் 181 கிமீ தூரத்தையும், சிம்பிள் ஒன் எனர்ஜி முழு சார்ஜில் 236 கிமீ வரம்பையும் வழங்குகின்றன.


ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் ஒன்னின் விலை ஒப்பீடு


- ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 ரூ .99,999 என்ற விலையிலும் எஸ் 1 ப்ரோ ரூ .1,29,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- மறுபுறம், சிம்பிள் ஒன் (Simple One) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ .1,09,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் ஒன்: டாப் ஸ்பீட் ஒப்பீடு
- ஓலா எலக்ட்ரிக் மணிக்கு 90 கிமீ வேகத்தை வழங்குவதாகக் கூறுப்பட்டுள்ளது. இந்த பைக் முழு சார்ஜில் 121 கிமீ வரை செல்லும் என தெரிகிறது.
- மறுபுறம், சிம்பிள் ஒன் மணிக்கு 98 கிமீ முதல் 105 கிமீ வரையிலான டாப் ஸ்பீடை வழங்குகிறது.


ALSO READ: Ola Electric Scooter: S1 மற்றும் S1 Pro வகைகளின் விலையை வெளியிட்டது ஓலா நிறுவனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR