Ola Scooter vs Simple One: ஆகஸ்ட் 15 அட்டகாசமான அறிமுகம், எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் எனர்ஜி ஆகிய இரு மின்சார ஸ்கூட்டர்களும் ஆகஸ்ட் 15, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று அறிமுகம் ஆகவுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2021, 04:23 PM IST
Ola Scooter vs Simple One: ஆகஸ்ட் 15 அட்டகாசமான அறிமுகம், எந்த ஸ்கூட்டர் சிறந்தது?  title=

புதுடெல்லி: ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் எனர்ஜி ஆகிய இரு மின்சார ஸ்கூட்டர்களும் ஆகஸ்ட் 15, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று அறிமுகம் ஆகவுள்ளன. ஓலா எலக்ட்ரிக் தனது மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவை சில வாரங்களுக்கு முன்னர் துவக்கியது. ஓலா ஸ்கூட்டருக்கு வாடிக்கையளர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஓலாவின் மின்சார உற்பத்தி பிரிவு தனது வாடிக்கையாளர்களிடமிருந்து முன்பதிவு கட்டணமாக ரூ .499-ஐ மட்டுமே வசூலிக்கிறது.

மறுபுறம், சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் அதன் சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை இன்னும் தொடங்கவில்லை. எனினும், வரவிருக்கும் பைக் ஓலாவின் எலெக்ட்ரிக் பைக்கிற்கு சரியான போட்டியை அளிக்கும் என்று தெரிகிறது.

ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் ஒன்: வரம்பு ஒப்பீடு

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார், சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் பயணிக்கும் என்று கூறினார். இது இந்தியாவில் மின்சார பைக்குகள் வழங்கும் மிக உயர்ந்த வரம்புகளில் ஒன்றாக இருக்கும்.

ALSO READ: Ola Electric ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆகஸ்ட் 15 அறிமுகமாகிறது Simple one ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric Scooter)) தனது மின்சார பைக்கின் வரம்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த மின்சார வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்ககூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த ஸ்கூட்டர் ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியால், 18 நிமிட சார்ஜிலேயே 75 கிமீ தூரம் வரை செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் ஒன்: விலை ஒப்பீடு

ஓலா எலெக்ட்ரிக் பைக் ஒரு அதிரடியான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகிறது. இந்த மின்சார இரு சக்கர வாகனம் ரூ .80,000 முதல் ரூ .1,00,000 வரையிலான விலை வரம்பில் இருகக்ககூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் (Scooter) சுமார் 1,10,000 - 1,20,000 ரூபாய் வரம்பில் விற்கப்படக்கூடும்.

ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் ஒன்: டாப் ஸ்பீடு ஒப்பீடு
ஓலா எலக்ட்ரிக் மூன்று வகைகளில் அறிமுகம் செய்யப்படக்கூடும்:

45 கிமீ வேகத்தில் ஒரு அடிப்படை மாடல், 70 கிமீ வேகத்திலான ஒரு நடுத்தர வேகம் மற்றும் 95 கிமீ வேகத்திலான டாப் மாடல் ஆகியவை இதில் உள்ளன. 

ஒப்பீட்டில், சிம்பிள் ஒன் அதன் 4.8 kWh லித்தியம் அயன் பேட்டரியின் உதவியால் சுமார் 100 கிமீ வேகத்தை அளிக்கிறது. நிறுவனம் 3.6 வினாடிகளில் 0 கிமீ வேகத்தில் இருந்து 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது.

ALSO READ: Komaki XGT X5: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக Electric Scooter

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News