Ola Electric Scooter: அட்டகாச புதிய அம்சத்துடன் கலக்கவுள்ளது ஓலா ஸ்கூட்டர், watch here!!
ஓலா மின்சார ஸ்கூட்டரை, வாகன ஓட்டிகள், நம்பமுடியாத வேகத்தில் ரிவர்சில் ஓட்ட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரின் ஒரு புதிய அம்சத்தைப் பற்றி சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஓலா மின்சார ஸ்கூட்டரை, வாகன ஓட்டிகள், நம்பமுடியாத வேகத்தில் ரிவர்சில், அதாவது பின்பக்கமாக ஓட்ட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் பைக் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தில், 2021 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய அம்சத்தைப் பற்றி அறிவித்த ஓலா எலக்ட்ரிக், ஒரு ட்வீட்டில், "நீங்கள் ஓலா ஸ்கூட்டரை நம்பமுடியாத வேகத்தில் ரிவர்சில் ஓட்டலாம். நீங்கள் இப்போது ஓலா ஸ்கூட்டரை ரூ.499 என்ற நம்பமுடியாத விலையில் முன்பதிவும் செய்யலாம்!" என தெரிவித்திருந்தது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான (Electric Scooter) முன்பதிவுகளைத் துவக்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு நிறுவனம் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இது வரை, ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் மிக அதிக அளவில் இருந்துள்ளன. ஓலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ .499 செலுத்தி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம்.
ALSO READ: Ola Scooter vs Simple One: ஆகஸ்ட் 15 அட்டகாசமான அறிமுகம், எந்த ஸ்கூட்டர் சிறந்தது?
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola Electric Scooter) 10 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் முன்பு அறிவித்தார். மேலும், என்ஜின் திறனைப் பொறுத்த வரையில், பைக் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, ஓலா எலக்ட்ரிக் அடிப்படை மாடல் (base model) 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய 2 கிலோவாட் மோட்டாரைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மாறுபாடு (mid variant) 4 கிலோவாட் மோட்டார் மூலம் இயக்கப்படும். ஓலா எலக்ட்ரிக்கின் டாப் மாடல் 7 கிலோவாட் மோட்டருடன் வரும் என்றும், 95 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
ஓலா (Ola) எலக்ட்ரிக் நிறுவனம் தனது மின்சார பைக்குகளில் சிறந்த பூட் ஸ்பேஸ்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு டீஸர் படத்தில், இரண்டு ஹெல்மெட்களை தாராளமாக வைக்கும் வகையில் பெரிய பூட் ஸ்பேஸ் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காண முடிகிறது.
ALSO READ: Ola Electric ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆகஸ்ட் 15 அறிமுகமாகிறது Simple one ஸ்கூட்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR