புதுடெல்லி: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி மின்சார வாகன சந்தையில் மாபெரும் புரட்சியை செய்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஓலா நிறுவனம், வரும் நாட்களில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க தயாராகி வருகிறது, இதன் மூலம் இரு சக்கரம், நான்கு சக்கரம் என மின்சார வாகனங்களின் அனைத்து துறைகளிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனம் முழு முனைப்புடன் உள்ளது என்பது தெளிவாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓலாவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவிஷ் அகர்வால், நிறுவனம் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2023-க்குள் மின்சார வாகனத் பணிதிட்டத்தில் ஈடுபடக்கூடும் என்று கூறினார். எனினும், நிறுவனம் மின்சார நான்கு சக்கர வாகனத் துறையில் எந்த வகையில் நுழையும் என்பது பற்றி அவர் அதிக தகவல்களைப் பகிரவில்லை.


ALSO READ: Ola Electric scooter: இந்த தேதியில் விநியோகம் தொடங்கும், முக்கிய அம்சங்கள் இவைதான்


தற்போது, ​​ஓலா எலக்ட்ரிக், எலக்ட்ரிக் கார்களை விற்கவில்லை என்றாலும், அதன் இணை நிறுவனமான ஓலா கேப்ஸ், இந்தியாவின் பல நகரங்களில் மின்சார நான்கு சக்கர வாகனங்களை வாடகை கேப்களாக இயக்குகிறது. அத்தகைய மின்சார கார்களை சார்ஜ் செய்யப் பயன்படுத்தப்படும் மையங்களையும் நிறுவனம் செயல்படுத்துகிறது.


தமிழ்நாட்டில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி ஆலையை மேம்படுத்துவதில் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தற்போது செயல்பட்டு வருவதாக அகர்வால் தெரிவித்தார். நிறுவனம் தனது எதிர்கால மின்சார வாகனங்களுக்கும் இந்த உற்பத்தி மையத்தை பயன்படுத்தும் என்று கூறப்படுகின்றது.


அந்த மையத்திற்கு அருகில் ஒரு துணை அல்லது சப்ளையர் பார்க்கை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சப்ளையர் பார்க்கில் காரை வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு நேரடியாக விற்க முடியும்.


பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மின்சார வாகன சந்தையில் எஸ் 1 (Ola S1) மற்றும் எஸ் 1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. தற்போது ஓலா மின்சார காரை அறிமுகம் செய்யக்கூடும் என்ற செய்தி வந்துள்ளது.


ஓலாவின் மின்சார பைக்குகள் (Ola Electric Scooter) 99,999 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அக்டோபர் 2021 முதல் மின்சார இரு சக்கர வாகனங்களின் விநியோகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Ola Electric Scooter: S1 மற்றும் S1 Pro வகைகளின் விலையை வெளியிட்டது ஓலா நிறுவனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR