மக்கள் அனைவரும் புதுவிதமான அம்சங்கள் புகுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களையே விரும்ப தொடங்கிவிட்டனர், அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல முன்னணி நிறுவனங்களும் பல்வேறு அம்சங்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை சந்தையில் களமிறக்குகின்றனர்.  அந்த வகையில் போக்கோ மொபைல்கள் பெருமபாலானோரால் விரும்பப்படுகிறது, தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ள போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி மொபைல் ஆனது குறைந்த விலையிலும் அதே சமயம் பலவிதமான அம்சங்களை உள்ளடக்கியும் வெளிவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 16 எம்பி செல்பி கேமரா மோட்டோரோலாவின் விலை இவ்வளவு தானா.! 


இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000த்திற்கும் குறைவாக கிடைக்கிறது, இதன் வடிவமைப்பு கிட்டத்தட்ட ரெட்மி நோட் 11 ப்ரோவை போலவே காணப்பட்டாலும், இதன் பெரிய கேமரா பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ஸ்மார்ட்போன் கண்ணைக்கவரும் வகையில் இருக்கிறது.  பல ஸ்மார்ட்போன்களில் ஒரே மாறியாக பயன்படுத்தப்படும் மேட் க்ளாஸ் டிசைனுக்கு பதிலாக ஒரு பளபளப்பான மேற்பூச்சுடன் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு கண்ணை பறிக்கும் வகையில் அழகாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை ரூ.30,000 என்று கூட மதிப்பிடலாம், அந்தளவிற்கு  இருக்கிறது.



இது 6.67இன்ச் எப்ஹெச்டி + அமோல்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, வீடியோக்களை அல்லது படங்களை சிறந்த வெளிச்சத்தில் பார்க்கலாம்.  ஸ்க்ரீன்களில் ஏதேனும் கீறல்கள் விழுவதை தடுக்கும் பொருட்டு கொரில்லா க்ளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது.  இதில் ஸ்னாப்ட்ராகன் 695 5ஜி சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது,  கேம்களை விளையாட சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது உதாரணமாக சிஓடி மொபைல், பிஜிஎம்ஐ  ஷேடோ ஃபைட்  கேம்களை இதில் சிறப்பாக விளையாடலாம்.  இது ஆண்ட்ராய்டு 11 உடன் வருகிறது,  கேமரா திறனை பொறுத்தவரையில் இது ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் போல் அல்லாமல் 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் வருகிறது.  இந்த  8எம்பி அல்ட்ரா வைட் கேமரா பகலில் மட்டுமே சிறப்பானதாக இருக்கிறது, மற்ற நேரங்களில் இதன் தெளிவு திருப்தி அளிக்கவில்லை.  அதேபோல இதிலுள்ள 2 எம்பி மேக்ரோ கேமராவானது சிறப்பானதாக அமையவில்லை.



இந்த மொபைலின் முன்புறமுள்ள 16 எம்பி கேமரா சிறப்பான தரத்துடன் செய்லபடுகிறது, இருப்பினும் இது ஒரு நபரின் சரும நிறத்தை சிவப்பு கலந்த நிறமாக காண்பிக்கிறது.  5000 எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் வெறும் 40 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறிவிடுகிறது.  இதன் சார்ஜிங் திறன் நீங்கள் கேம் விளையாடினால் கூட ஒரு நாள் முழுவதும் தாங்கும் வகையில் அமைந்துள்ளது.


மேலும் படிக்க | அசத்தலான Vivo T1 5G போனின் விலை வெறும் ரூ. 1,990: கலக்கும் பிளிப்கார்ட் சேல் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR