ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் புதிய ஸ்மார்ட்போன்
ரெட்மி நிறுவனம் 15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Redmi 11 Prime Series: Xiaomi இந்தியாவில் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi A1 உடன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் Xiaomi-ன் தீபாவளி சிறப்பு வெளியீடாக வெளிவந்துள்ளது. ரெட்மி 11 பிரைம் சீரிஸ் சிறந்த அம்சங்களுடனும், மிகக் குறைந்த விலையிலும் வருகிறது. ரெட்மி 11 பிரைம் சீரிஸின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.
Redmi 11 Prime Series விலை
Redmi 11 Prime
4 ஜிபி + 64 ஜிபி - ரூ 12,999
6 ஜிபி + 128 ஜிபி - ரூ 14,999
இது Thunder Black, Chrome Silver மற்றும் Meadow Green ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
Redmi 11 Prime 5G
4 ஜிபி + 64 ஜிபி - ரூ 13,999
6 ஜிபி + 128 ஜிபி - ரூ 15,999
இது பெப்பி பர்பிள், ஃப்ளாஷி பிளாக் மற்றும் ப்ளேஃபுல் கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கிறது. Redmi 11 Prime 5G-யின் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். Mi.com, Amazon India, Mi Home கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இதை வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம்.
மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!
ரெட்மி 11 பிரைம் சீரிஸ் விவரக்குறிப்புகள்
Redmi 11 Prime தொடரில் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G என இரண்டு மாடல்கள் உள்ளன. முதலாவது மாடல் 4G, இரண்டாவது 5G-க்கான ஆதரவை வழங்குகிறது. Redmi 11 Prime ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Poco M5 -ஐப் போன்றே வித்தியாசமான பின்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மறுபுறம், Redmi 11 Prime 5G என்பது சீனாவில் இருந்து மறுபெயரிடப்பட்ட Redmi Note 11E ஆகும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் 2408 x 1080 பிக்சல்கள் (FHD+), 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 6.58-இன்ச் எல்சிடி திரையை கொண்டிருக்கும்.
ரெட்மி 11 பிரைம் சீரிஸ் கேமரா
4ஜி மாடலில் கூடுதலாக 2எம்பி மேக்ரோ ஸ்னாப்பருடன் 50எம்பி பிரதான கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்ஃபி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அவற்றின் சிப்செட் ஆகும். 4G வேரியண்ட் புளூடூத் 5.3 உடன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதே சமயம் 5G வேரியண்ட் புளூடூத் 5.1 உடன் MediaTek Dimensity 700 சிப் கொண்டுள்ளது. அவை LPDDR4x ரேம், UFS 2.2 சேமிப்பு மற்றும் பிரத்யேக microSD கார்டு ஸ்லாட்டுடன் வருகின்றன.
ரெட்மி 11 பிரைம் சீரிஸ் பேட்டரி
இதுதவிர மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை டூயல்-பேண்ட் வைஃபை, ஜிஎன்எஸ்எஸ், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ஐஆர் பிளாஸ்டர், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை இருக்கும். இருப்பினும், 5G வேரியண்ட் எடையுடன் ஒப்பிடும்போது 4G மாடல் 201 கிராம் சற்று கனமாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ