சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi பட்ஜெட் விலை மொபைலான Redmi A1-க்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலையுயர்ந்த இயர்போன்களும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இப்போது பட்ஜெட் விலையில் மொபைல் வாங்குவதற்கு நீங்கள் நினைத்திருந்தால் இந்த தள்ளுபடியை மிஸ் செய்து விட வேண்டாம். அமேசான் கொடுக்கும் சிறப்புச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக பட்ஜெட் விலையில் மொபைல் தேடுபவர்களுக்கு இது சரியான தருணம் என்று கூட சொல்லலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் ஷாப்பிங்கில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அமேசான் நிறுவனம் தான் இந்த மிகப்பெரிய தள்ளுபடியை கொடுக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் இஎம்ஐ ஆப்சனும் இருக்கிறது. அதுவும் நோ-காஸ்ட் EMI-ல் வாங்கலாம்.


மேலும் படிக்க | கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர்


Redmi A1 பெரிய தள்ளுபடி


இந்திய சந்தையில், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Redmi A1 இன் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.8,999. இந்த போன் அமேசானில் 37% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.5,699-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எச்எஸ்பிசி வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.250 வரை கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும். பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்பவர்கள் ரூ.5,400 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலனைப் பெறலாம். இது மட்டுமின்றி ரூ.699 மதிப்புள்ள வயர்டு இயர்போன்களும் இந்த போனுடன் இலவசமாக கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இதை வெளிர் நீலம், கருப்பு மற்றும் வெளிர் பச்சை வண்ண விருப்பங்களில் வாங்கலாம்.


Redmi A1 இன் விவரக்குறிப்புகள் 


ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD + LCD ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் டிஸ்ப்ளே உள்ளது. இந்த சாதனம் MediaTek Helio A22 செயலி மற்றும் 2GB LPDDR4x ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு பிரத்யேக SD கார்டு ஸ்லாட் வழியாக 512GB வரை விரிவாக்கக்கூடியது.


கேமரா அம்சங்களைப் பற்றி பேசுகையில், சாதனத்தின் பின்புற பேனலில் 8MP இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 5MP முன்பக்க கேமரா உள்ளது. சாதனம் 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் பெட்டியிலேயே 10W சார்ஜருடன் வருகிறது.


மேலும் படிக்க | அதிரடி ஆபர்! ப்ளிப்கார்ட்டில் Iphone 14-க்கு இவ்வளவு தள்ளுபடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ