அதிரடி ஆபர்! ப்ளிப்கார்ட்டில் Iphone 14-க்கு இவ்வளவு தள்ளுபடியா?

Iphone 14 offer: ரூ.79,900 விலை மதிப்புடைய ஐபோன் 14 ஆனது ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் ரூ.66,900க்கு விற்கப்படுகிறது. ஐபோனை வாங்குபவர்களுக்கு ரூ.13,000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது   

Written by - RK Spark | Last Updated : Jan 28, 2023, 01:30 PM IST
  • ப்ளிப்கார்ட்டில் இதுவரை இல்லாத அளவில் தள்ளுபடி.
  • ஐபோன் 14 ஸ்மார்ட்போன்க்கு அதிரடி ஆபர்!
அதிரடி ஆபர்! ப்ளிப்கார்ட்டில் Iphone 14-க்கு இவ்வளவு தள்ளுபடியா?  title=

ஐபோன் 14 வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இது நல்ல நேரம், ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.  ரூ.79,900 விலைக்கொண்ட ஐபோன் 14 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.10,000 தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது.  இந்த ஆண்டில் உங்களுக்கு ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நான்கு மாடல்கள் சிறப்பான தள்ளுபடியில் கிடைக்கும்.  இதில் ஐபோன் 14 பிளஸ் பெரியளவில் நிறுவனத்திற்கு வருவாயை கொடுக்கவில்லை என்றாலும் இது சிறப்பான மொபைல் என்று கூறப்படுகிறது.  ஐபோன் 14 மொபைலுக்கு மட்டுமின்றி ஐபோன் 14 ப்ளஸ் மொபைலுக்கும் ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஜியோவின் 4ஜி மொபைல் இலவசம்...! 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை

ரூ.79,900 விலை மதிப்புடைய ஐபோன் 14 ஆனது ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் ரூ.66,900க்கு விற்கப்படுகிறது. ஐபோனை வாங்குபவர்களுக்கு ரூ.13,000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் 14 மொபைலை வாங்குபவர்களுக்கு 5% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  உங்கள் பழைய ஐபோனை கொடுத்து புதிய ஐபோனை வாங்கினால் ரூ.21,400 வரை விலை குறைப்பு செய்யப்படும், இதன் மூலம் உங்களுக்கு ஐபோனின் விலை மேலும் குறையும்.  அடுத்ததாக ரூ. 89,900 விலை மதிப்புள்ள ஐபோன் 14 பிளஸ் ஆனது ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் ரூ. 75,999க்கு கிடைக்கிறது.  ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் 14 மொபைலை வாங்குபவர்களுக்கு 5% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  உங்கள் பழைய ஐபோனை கொடுத்து புதிய ஐபோனை வாங்கினால் ரூ.21,400 வரை தள்ளுபடி கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி பேனல் மற்றும் மெல்லிய பெசல்களுடன் சிறப்பான வண்ண வரம்பைக் கொண்டுள்ளது.  இந்த மொபைலானது ஹெச்டிஆர் டிஸ்பிளே  மற்றும் 1200-நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் பேஸ் ஐடி சென்சார்களுடன் வருகிறது.  இது 60 ஹெட்ஸ் நிலையான புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது.  இது 16-கோர் என்பியூ மற்றும் 5-கோர் கிராபிக்ஸ் செயலியைக் கொண்டுள்ளது.  இது 4ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி ஆகிய மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வருகிறது.  மேலும் இது iOS 16 வெர்ஷனை இயக்குகிறது.  இதுதவிர மொபைல் 5ஜி, வைஃபை, டூயல் சிம், புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான லைட்னிங் போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் வருகிறது.  இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் 12MP வைட்-ஆங்கிள் சென்சார், இரண்டாம் நிலை 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | ஜியோவின் 4ஜி மொபைல் இலவசம்...! 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News