கடந்த சில ஆண்டுகளாக, குளோபல் என்சிஏபி நடத்தும் கார்களின் பாதுகாப்பு தொடர்பான ரேட்டிங் இந்திய வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளன. குளோபல் என்சிஏபி நடத்தும் ரேட்டிங்கில் மகேந்திரா மற்றும் டாட்டா நிறுவனங்களின் கார்களும் இடம்பிடித்துள்ளன. அந்தவகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் பாதுகாப்பு அம்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | UPI vs NEFT: பணப்பரிவர்த்தனைக்கு எது சிறந்தது? அறிந்து கொள்வோம்


டாடா பஞ்ச்


டாடா நிறுவனத்தின் டாடா பஞ்ச் பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த ரேட்டிங் பெறும் டாடா நிறுவனத்தின் 3வது கார் இதுவாகும். பாதுகாப்பு சோதனையில் டாடா பன்ச் மொத்தம் 16.45 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும் இந்தக் கார், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது. இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், முன் இருக்கை பெல்ட் நினைவூட்டல் மற்றும் சென்சார்கள் உள்ளன. 


மஹிந்திரா XUV300


இந்தக் காரும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த சோதனையில் மொத்தம் 16.42 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஒப்பீட்டளவில் டாடா பஞ்சை விட சற்றே குறைவு. குழந்தைகளின் பாதுகாப்பு புள்ளிகளில் 49க்கு 37.44 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. XUV300 போன்ற மற்ற மஹிந்திரா கார்கள் இரண்டு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற டிஸ்க் பிரேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும்.


டாடா அல்ட்ராஸ்


மேட் இன் இந்தியா ஹேட்பேக் கொண்ட கார் டாடா அல்ட்ராஸ். பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 17க்கு 16.13 மதிப்பெண்களை பெற்றுள்ளது. டாடா நிறுவனதின் 5 ஸ்டார் ரேட்டிங்கில் 2வது இடத்தில் இருக்கும் கார். இருப்பினும் இந்த கார் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 49 க்கு 29 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. Tata Altroz ​​இரண்டு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் நினைவூட்டல் பின்புற பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை இருக்கும்.


டாடா நெக்ஸான்


குளோபல் NCAP மதிபிட்டில் பாதுகாப்புக்காக முழுமையான 5 நட்சத்திரங்கள் பெற்ற இந்திய கார் டாடா நெக்ஸான். டாடாவின் காம்பாக்ட் SUV ஆனது ஆரம்ப கட்டத்தில் 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. இதனை அந்த நிறுவனம் மேம்படுத்தி மீண்டும் சோதனைக்கு அனுப்பியது, அதன் பிறகு 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டது. பெரியவர்களின் பாதுகாப்பிற்காக கார் 17க்கு 16.06 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை கார் 49க்கு 25 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | கூகுள் மேப் மூலம் சம்பாதிப்பது எப்படி?


மஹிந்திரா XUV700


XUV700 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பெஸ்ட் கார்களில் ஒன்றாகும். பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை முழுமையாக பெற்ற கார்களில் இதுவும் ஒன்று. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 16.03 புள்ளிகளைப் பெற்றது. குழந்தைகளின் பாதுகாப்பு அடிப்படையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதில் 7 ஏர்பேக்குகள் மற்றும் மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பு ஆகியவை உள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR