பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy Note 10 Lite விலை, 4000 வரை குறைப்பு...
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Samsung அதன் புதுவரவான Galaxy Note 10 Lite-ன் விலையினை அதிரிடியாக குறைத்துள்ளது.
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Samsung அதன் புதுவரவான Galaxy Note 10 Lite-ன் விலையினை அதிரிடியாக குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பை அடுத்து இந்த ஸ்மார்ட்போது தற்போது பயனர்களுக்கு ரூ.4000 வரை விலை குறைகாக கிடைக்கும் என தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. Samsung Galaxy Note 10 Lite இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.39,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது இதன் 6GB ROM மாடலுக்கு ரூ.37,999 எனவும், 8GB மாடலுக்கு ரூ.39,999 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் SBI கிரெடிட் கார்டில் சிறந்த தள்ளுபடி சலுகை மற்றும் கேஷ்பேக் ஆப்பர்...
இந்நிலையில் தற்போது வாடிக்கையாளர்கள் சிட்டி பேங்க் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வழியாக இந்த சாதனத்தை வாங்கினார் ரூ.5 ஆயிரம் வரை கேஷ்பேக் பெறலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த சலுகைக்கு பின்னர் Galaxy Note 10 Lite-ன் பயனுள்ள விலை ரூ.32,999 (6GB மாறுபாடு) மற்றும் ரூ.34,999 (8GB மாறுபாடு) வரை குறைக்கப்படும்.
சிட்டி பேங்க் கேஷ்பேக் எடுக்க வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு ரூ.2000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும் வகையில் நிறுவனம் மற்றொரு சலுகையினை அறிவித்துள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு 2 மாதங்களுக்கு கூடுதலாக 9 மாதங்கள் வரை கட்டணமில்லாத EMI சலுகையும் கிடைக்கும். இத்துடன் YouTube பிரீமியம் சந்தாவும் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த அனைத்து சலுகைகளும் 2020 ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Galaxy Note 10 Lite ஆனது Oneplus 7T, Oneplus 8, Realme X2 Pro மற்றும் Redmi K20 Pro ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இருப்பினும், மற்ற ஸ்மார்ட்போன்கள் எதுவும் S பென்னுடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7" சூப்பர் அமோலேட் எட்ஜ்-டு-எட்ஜ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே உள்ளது மற்றும் இது எக்ஸினோஸ் 9810 ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டைப் பயன்படுத்தி தொலைபேசியில் சேமிப்பிடத்தை விரிவாக்க முடியும்.
முழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung!...
புகைப்படம் எடுப்பதற்காக, Galaxy Note 10 Lite மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 12 மெகாபிக்சல் பிரதான கேமராவை இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸுடன் கொண்டுள்ளது, 12 மெகாபிக்சல் அகல-கோண கேமரா ஒரு f/ 2.2 துளை மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் f / 2.4 துளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் கேமராவை f/ 2.2 துளை அளவுடன் நிறுவனம் அளிக்கிறது.