முழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung!

கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில், பிரபல மொபைல் தயாரிப்பு நிருவனமான சாம்சங் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது!

Last Updated : May 3, 2020, 02:28 PM IST
முழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung! title=

கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில், பிரபல மொபைல் தயாரிப்பு நிருவனமான சாம்சங் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது!

முன்னதாக ஏப்ரல் மாதத்தில், புதிய GST விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையினை ஏற்றின. இந்நிலையில் தற்போது சாம்சங் தனது Galaxy M21 மற்றும் Galaxy 50S விலையை குறைத்துள்ளது. புதிய விலைகளை சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • சாம்சங் Galaxy M21 மற்றும் Galaxy A50S புதிய விலைகள்

சாம்சங் Galaxy A50S விலையில் ரூ.2,471 குறைக்கப்பட்டுள்ளதாகவும், Galaxy M21 விலையில் ரூ.1,023 குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு பிறகு, Galaxy M21-ன் 4GB ROM வேரியண்டின் விலை ரூ.13,199-ஆகவும், Galaxy 50S ரூ.18,599 ஆரம்ப விலையிலும் கிடைக்கிறது. புதிய விலைகள் சாம்சங்கின் தளத்தைத் தவிர அமேசானுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சாம்சங் Galaxy M21 விவரக்குறிப்பு

தொலைபேசியில் 6.4" முழு HD Plus Super AMOLED டிஸ்ப்ளே 1080x2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. கொரில்லா கிளாஸ் 3-ன் பாதுகாப்பு தொலைபேசியில் கிடைக்கும். இது தவிர, Galaxy M21 Exynos 9611 செயலி மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றிற்கான மாலி-ஜி 72 MP3 GPU-யைப் பெறும்.

தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் பிரதான கேமரா 48 மெகாபிக்சல்கள், இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா அகலம் மற்றும் மூன்றாவது லென்ஸ் 5 மெகாபிக்சல் ஆழம் சென்சார் கொண்டுள்ளது. தொலைபேசியில் செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. செயற்கை நுண்ணறிவும் கேமராவுடன் துணைபுரிகிறது.

தொலைபேசியில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS, USB Type-C port, 3.5mm இயர்போன் மற்றும் கைரேகை சென்சார் ஆகியவை பின் பேனலில் கிடைக்கும். Galaxy M21-ல் 6000mAh பேட்டரி உள்ளது, இது 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. தொலைபேசியின் எடை 188 கிராம் என பட்டியலிடப்பட்டுள்ளது.

  • சாம்சங் Galaxy A50s-ன் விவரக்குறிப்பு

சாம்சங் Galaxy A50s 1080X2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.4" FHD Plus Super Amoled Infinity U display கொண்டு வெளியாகிறது. இதனுடன், காட்சி கைரேகை சென்சார்களும் கிடைக்கும். அதே நேரத்தில், சிறந்த செயல்திறனுக்காக, இந்த தொலைபேசியில் Exynos 9610 chipset செயலி உள்ளது. சேமிப்பிடத்தைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களுக்கு 4GB ROM கொண்ட 128GB உள் சேமிப்பு கிடைக்கும்.

கேமராவைப் பற்றி பேசும்போது, Galaxy A50s-ன் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 5 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். மறுபுறம், நிறுவனம் செல்ஃபி பிரியர்களுக்காக 32 மெகாபிக்சல் கேமராவை வழங்கியுள்ளது.

இணைப்புக்காக 4 VoLTE, GPS, Wi-Fi மற்றும் USB போர்ட் சி போன்ற அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இது தவிர, Galaxy A50s-ல் உள்ள 4000mAh பேட்டரி வேகமான சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும்.

Trending News