Samsung Galaxy S20 FE 5G: சாம்சங் இந்த ஆண்டு மார்ச் மாதம் Galaxy S20 FE 5G என்ற புதிய 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தின் போது ரூ .54,999 விலையில் இருந்த போன், இன்று ரூ .40,000 வரையிலான தள்ளுபடியில் கிடைக்கிறது. இது ஒரு வதந்தியா என உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், இது உண்மைதான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு அசத்தலான போனை குறைந்த விலையில் நீங்கள் வாங்க முடியும். அதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.


Samsung Galaxy S20 FE 5G-இல் பம்பர் தள்ளுபடி


இந்த சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்று சாம்சங் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி பற்றிய தகவல் நிறுவனத்தின் ரீடெயில் ஸ்டோரிலிருந்து பெறப்பட்டது. நிறுவனம் தனது இணையதளத்தில் இந்த புதிய விலையை புதுப்பித்துள்ளது.


மேலும், இந்த போனுக்கு இணையதளத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பழைய போனுக்கு ஈடாக இந்த புதிய போனை வாங்கினால், நீங்கள் ரூ .34,559 வரையிலான நன்மையைப் பெற வாய்ப்பு கிடைக்கும்.


ALSO READ: Infinix போனின் அறிமுகம் விரைவில்: 10 நிமிடத்தில் full charge, முழு விவரம் இதோ


ஆனால் இணையதளத்தில் அசல் தள்ளுபடி 5 ஆயிரத்திற்கு பதிலாக 4 ஆயிரத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாக நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி -யில் ரூ .38,599 தள்ளுபடி பெறலாம். இதன் காரணமாக இந்த போனின் விலை ரூ .16,400 ஆக குறைந்து விடும்.


இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அற்புதமாக உள்ளது


இந்த தொலைபேசியில் (Mobile Phone) மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இதில் f/1.8 அபர்சர் கொண்ட 12 எம்பி பிரதான கேமரா, 30x டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் கொண்ட 8 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை உள்ளன. இதில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி எடுப்பதற்காக 32 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.


இதர அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone), வாடிக்கையாளர் 4,500mAh பேட்டரியைப் பெறுவார்கள். இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இரட்டை சிம் மற்றும் 5 ஜி வசதிகளுடன் கூடிய இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரும் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆல் இயக்கப்படும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் கிடைக்கும். இதன் திரை 6.5 இன்ச் ஆகும். இது சூப்பர் AMOLED இன்பினிட்டி ஓ அம்சம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.


ALSO READ: Xiaomi வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: இந்த Redmi போனின் விலை அதிகரித்தது, புதிய விலை இதுதான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR