புதுடெல்லி: பிரபல பிராண்டான லெனோவா தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனான Lenovo Legion Y90ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போனில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? பிரபல லேப்டாப் தயாரிப்பாளரான லெனோவா தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.


லெனோவாவின் புதிய கேமிங் ஸ்மார்ட்போனான லெனோவா லெஜியன் ஒய்90 சில காலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது, 


இது அனைவருக்கும் பிடித்த கேமிங் பிராண்டாக இருப்பதால், இந்த ஸ்மார்ட்போனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் கசிந்துள்ளன.


Also Read | பாதி விலைக்கும் குறைவான விலையில் Samsung ஸ்மார்ட் டிவி: Flipkart Sale அதிரடி


Lenovo Legion Y90 அம்சங்கள்
சீன சமூக ஊடக தளமான வெய்போவில் உள்ள ஒரு பதிவர், லெனோவாவின் இந்த சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போன் பற்றிய விரிவான தகவலை வெளியிட்டார். 


இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் எப்படி இருக்கும், பேட்டரி எவ்வளவு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


மொபைலின் சேமிப்பகம்
Lenovo Legion Y90 640GB UFS 3.1 சேமிப்பகத்துடன் வெளியிடப்படலாம் என்றும், இந்த உள் சேமிப்பு 512GB + 128GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்தின்படி பிரிக்கப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது. 


18ஜிபி எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் என பிரிக்கப்பட்டுள்ள இந்த லெனாவோ ஸ்மார்ட்போனில் மொத்தம் 22 ஜிபி ரேம் கிடைக்கும் என்று கசிந்த ஸ்கிரீன்ஷாட்டில் தெரிகிறது.


ALSO READ | Fliplkart Offer: ரூ.299 -க்கு Realme 8 5G ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி?


ஸ்மார்ட்போன் பேட்டரி மற்றும் பிற அம்சங்கள்
செய்திகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் 5,600mAh பேட்டரியுடன் வெளியிடப்படலாம். கூடுதலாக, 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படும். 


Snapdragon 8 Gen1 செயலியில் வேலை செய்யும் இந்த மொபைலில், நீங்கள் 6.92-இன்ச் ஸ்ட்ரெய்ட் ஸ்கிரீன், 720Hz டச் சாம்லிங் வீதம் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்தையும் பெறுவீர்கள்.


தற்போது, ​​Lenovo Legion Y90 எப்போது வெளியாகும்? அதன் விலை என்ன என்ற எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | 6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ..! 5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR