Fliplkart Offer: ரூ.299 -க்கு Realme 8 5G ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி?

பிளிப்கார்ட் Big Savings Days ஆஃபரில் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனை 299 ரூபாய்க்கு வாங்கலாம்

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 3, 2023, 08:54 AM IST
  • பிளிப்கார்ட் ஆஃபரில் ரூ.299 கிடைக்கும் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்
  • ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ரூ.16,999 -க்கு விற்பனையாகிறது
  • ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வைத்திருந்தால் கூடுதல் சலுகை
Fliplkart Offer: ரூ.299 -க்கு Realme 8 5G ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி?

பிளிப்கார்ட் ஆஃபரில் அவ்வப்போது நினைத்து பார்க்க முடியாத ஆஃபர்களை வாரி வழங்கும். அந்தவகையில் ஜனவரி 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் Flipkart Big Savings Days ஆஃபரில் பல சுவாரஸ்யமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விற்பனையின் கடைசி நாள் இன்று இரவோடு முடிவடைகிறது. 

Add Zee News as a Preferred Source

ரூ.16,999 மதிப்புள்ள Realme 8 5G ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.299க்கு பெற முடியும். அது எப்படி? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.

Also Read | பாதி விலைக்கும் குறைவான விலையில் Samsung ஸ்மார்ட் டிவி: Flipkart Sale அதிரடி

Realme 8 5G ஆஃபர்

Realme நிறுவனத்தின் Realme 8 5G ஸ்மார்ட்போனை மார்க்கெட்டில் 16,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டிலும் ரூ.16,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், உங்களுக்கு ரூ.750 கேஷ்பேக் கிடைக்கும். இதன்மூலம் போனின் விலை ரூ.15,749 -க்கு குறைந்துவிடும்

எக்ஸ்சேஞ்ச் சலுகை

இந்த ஆஃபர் விற்பனையில் பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.15,450 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.16,999க்கு பதிலாக ரூ.299க்கு மட்டுமே வாங்க முடியும்.

Also Read | 6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ..! 5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம்

Realme 8 5G -ன் அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். MediaTek Dimension 700 சிப்செட்டில் வேலை செய்யும் இந்த போனில், 6.5-inch Full HD + LCD இன்-செல் டிஸ்ப்ளே கிடைக்கும். 5G சேவைகளுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில், மூன்று பின்புற கேமராக்கள் இடம்பெற்றிருக்கும். ஆண்ட்ராய்டு 11 வெர்சனில் வொர்க் ஆகும் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி மற்றும் டூயல் சிம் சேவைகளையும் கொண்டிருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

About the Author

Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

...Read More

Trending News