டச்சு நிறுவனமான லைட்இயர் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் முதல் சோலார் காரை அறிமுகப்படுத்த உள்ளது. காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 மைல் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாகனத்தை ஓட்டத் தொடங்கிய 10 வினாடிகளில் 100 மைல் வேகத்தை எட்டக்கூடிய திறன் படைத்த காராக இது இருக்கும். லைட்இயர், மொத்தம் 946  கார்களை வெளியிடும். கார் ஒன்றின் விலை சுமார்  இரண்டு கோடி ரூபாய் ($262,000) ஆகும்.


நெதர்லாந்தைச் சேர்ந்த சோலார் EV ஸ்டார்ட்அப் Lightyear கார் உற்பத்தி நிறுவனம், உலகின் முதல் சோலார் கார்  லைட்இயர் 0 என்ற அசத்தலான காரை அறிமுகப்படுத்தியது. ஆறு வருட கண்டுபிடிப்புக்குப் பிறகு, சோலார் கார் உலக அரங்கில் வெளியிடப்பட்டது.


ஜூன் 9 அன்று, உலகளாவிய ஆன்லைன் பிரீமியரில் லைட்இயர் 0 வெளியிடப்பட்டது. இந்த பிரீமியரில், காரின் இறுதி வடிவமைப்பு மற்றும் அதன் தனித்துவமான விவரக்குறிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை நிறுவனம் காட்சிப்படுத்தியது.



 
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான லைட்இயர், அறிமுகப்படுத்திய உலகின் முதல் சோலார் கார், கோடைக்காலத்தில் எரிபொருள் செலவே இல்லாத வாகனம் ஆகும். 


இந்த ஆண்டின் (2022) இறுதியில் சாலைகளில் இறக்கப்படும் லைட்இயர் 0 காரின் கூரை, ஹூட் மற்றும் டிரங்க் ஆகியவற்றில் வளைந்த சோலார் பேனல்களைக் கொண்டிருக்கும்.


இந்த சோலார் பேனல்கள், வண்டியை ஓட்டும் போது மின்சார பேட்டரியை டாப் அப் செய்யும். ஐரோப்பாவில் உலகின் முதல் சோலார் கார் டெலிவரி இந்த ஆண்டு நவம்பரில் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | Used Cars: ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர் 


லைட்இயர் 0 மாடல் தொடர்பாக வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான Lex Hoefsloot சோலார் கார்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்: 


“எலக்ட்ரிக் கார்கள் காலத்துக்கு ஏற்ற கார்கள் உற்பத்தியில் சரியான திசையில் ஒரு படியாகும், ஆனால் அவை இன்னும் பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் ஆற்றலைச் சார்ந்துள்ளது. சூரியன் என்ற புதிய மூலத்தை போக்குவரத்துக்கான வாகனங்களில் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனத்தை பயன்படுத்த முடியும். சோலார் கார்கள், எரிபொருள் செலவை குறைக்கிறது”.


வாகனத்தின் உட்புறம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு (eco-friendly) வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் தாவர அடிப்படையிலான தோல், மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் நிலையான மறுகட்டமைக்கப்பட்ட பிரம்புகளால் உருவாக்கப்பட்ட கை ரெஸ்ட் இருக்கிறது.  



உலகின் முதல் சோலார் காரின் பேட்டரி வித்தியாசமானது. பவர்டிரெய்ன் உலகில் மிகவும் திறமையான பேட்டரி ஆகும். காரின் ஏரோடைனமிக் (aerodynamic shape) வடிவம் மற்றும் நான்கு இன்-வீல் மோட்டார்கள்  சிறிய பேட்டரியால் இயங்குகிறது.  .


"முழு காரும் இலகுவானது, மேலும் நீங்கள் இந்த நேர்மறையான பின்னூட்டச் சுழற்சியில் இறங்குவீர்கள், அங்கு எல்லாமே இலகுவாக மாறும். அதனால்தான் எங்களால் 1,575 கிலோகிராம்களில் காரை கட்டமைக்க  முடிந்தது. இதே போன்ற வரம்பை வழங்கும் மற்ற கார்களைப் பார்த்தால், அவை அனைத்தும் சுமார் 40% கனமானவை," என்று  Lex Hoefsloot கூறினார்.


காரின் அதிகபட்ச வேகம் 100 மைல் மட்டுமே, லைட்இயர், மொத்தம் 946  கார்களை வெளியிடும். கார் ஒன்றின் விலை சுமார்  இரண்டு கோடி ரூபாய் ($262,000) ஆகும்.


மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR