’பீஸ்ட் மோடில் டாடா நிறுவனம்’ கார் விற்பனையில் ஹூண்டாயை பின்னுக்கு தள்ளியது
இந்தியாவில் கார் விற்பனையில் டாடா நிறுவனம் சாதித்துக் காட்டியுள்ளது.
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய ஆட்டோ நிறுவனமாக மாறியுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மாஸ் காட்டியுள்ளது. கடந்த மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 42,293 கார்களை மொத்தமாக உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஆனால், அதனுடன் டாடா நிறுவனத்தை ஒப்பிடும்போது அதிக கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 43,341 கார்களை விற்பனை செய்துள்ளது டாடா நிறுவனம்.
மேலும் படிக்க | Honda கார் வாங்க இதுவே சரியான நேரம்; அதிரடி தள்ளுபடிகள் அறிவிப்பு
இதன்மூலம் கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக டாடா மோட்டார்ஸிடம் தனது நம்பர் 2 இடத்தை ஹூண்டாய் இழந்துள்ளது. டிசம்பர் மாதம் 2021-ல், ஹூண்டாய் குறைந்த விற்பனையைப் பதிவுசெய்தது. அப்போது, 10 கார் உற்பத்தியாளர்களின் பட்டியலில் 3வது இடத்தை சரிந்தது. இப்போது, மே மாதத்தில் மீண்டும் 3வது இடத்துக்கு இறங்கியுள்ளது. ஹூண்டாயுடன் ஒப்பிடும்போது டாடா மோட்டார்ஸ் 1,048 யூனிட்களின் நல்ல வித்தியாசத்தில் முந்தியுள்ளது.
ஹூண்டாய் விற்பனை 67% வளர்ச்சி
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கடந்த மே மாதம், உள்நாட்டு சந்தையில் 42,293 கார்கள் மற்றும் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டுடன் ஒப்பிடும்போது 69.17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே மாதத்தில், நிறுவனத்தின் ஏற்றுமதி மே 2021-ல் 5,702 யூனிட்களில் இருந்து 57.31 சதவீதம் அதிகரித்து 8,970 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. மே 2022-ல் மொத்தம் 51,263 யூனிட்களை (உள்நாட்டு ஏற்றுமதி) விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டில் விற்பனை 66.96% அதிகரித்துள்ளது.
டாடா விற்பனை 185 சதவீதம் அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் மே 2022-ல் பயணிகள் வாகனப் பிரிவில் 43,341 கார்களை விற்றது. இது ஆண்டுக்கு ஆண்டு 185% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்நிறுவனம் 15,181 கார்களை டெலிவரி செய்திருந்தது.மே 2022-ல் 39,887 ICE பயணிகள் வாகனங்களை விற்றது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14,705 யூனிட்களாக இருந்தது. நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் விற்பனை 626% அதிகரித்து 3,454 ஆகவும் இருந்தது.
மேலும் படிக்க | இந்தியாவில் ரூ 59.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது KIA EV6
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR