Maruti Suzuki Ertiga மற்றும் Kia Carens ஆகியவை தற்போது சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் MPV மாடல் கார்கள். ஆனால் இப்போது விரைவில் ஹூண்டாய் நிறுவனம், இந்த இரண்டு கார்களும் சந்தையில் வலுவாக போட்டியை உருவாக்கப்போகும் புதிய காரை களமிறக்க உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை 7 இருக்கைகள் கொண்ட MPV பிரிவில் எப்போதும் Maruti Suzuki Ertiga ஆதிக்கம் செலுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Technology Cars: 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்! Glanza முதல் BMW iX Flow வரை


ஏனெனில் பிரிவில் எர்டிகா மட்டுமே இருந்தது. அதன்பின்னர், சூழ்நிலை மாறிவிட்டது. Kia இந்தியா நிறுவனம் குறைந்தவிலையில் 7 இருக்கைகள் கொண்ட Karens MPVயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மாருதிக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்பட்ட இந்தக் காருக்கும் வரவேற்பு இருந்தது. இதனை உன்னிப்பாக கவனித்த ஹூண்டாய் நிறுவனம், 7 சீட்டர் கார்களுகான மார்க்கெட்டில் இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, இந்தப் பிரிவில் புதிய காரை களமிறக்க முடிவெடுத்துள்ளது.


3 வரிசையில் 7 சீட்டர் இருக்குமாறு கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த காரின் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. அப்போதே மார்க்கெட்டில் சலசலப்பு உருவானது. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் இந்தக் கார் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதனால், எப்போது சந்தையில் களமிறக்கப்படும் என மாருதி மற்றும் கியா நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன. ஏனென்றால், ஹூண்டாய் 7 சீட்டர் வந்தால், அந்த இரு நிறுவனங்களுக்கு கடும் போட்டி உருவாகும்.


மேலும் படிக்க |  குறைந்த விலையில் Ola S1 Pro வாங்க இதுவே கடைசி வாய்ப்பு


வடிவமைப்பை பொறுத்த வரை ஹூண்டாய் ஸ்டாரியா எம்பிவிக்கு இணையான முன் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஸ்டார்கேசரில் வழங்கப்படும் அம்சங்களில் ஸ்பிலிட் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டேப்பரிங் ப்ரொஃபைல் ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய க்ரெட்டா எஸ்யூவியில் கொடுக்கப்பட்டதைப் போன்ற கிரில் ஹூண்டாய் எம்பிவி சோதனை மாடலில் காணப்படவில்லை. எம்பிவியின் பின்புறத்தில் பின்புற முக்கோண வடிவ டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய 7-சீட்டர் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரலாம். டீசல் எஞ்சினிலும் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR