புதுடெல்லி: மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டருக்கு சமமான இந்திய பதிப்பு செவ்வாய்க்கிழமை திடீரென நெட்டிசன்களிடம் பிரபலமானது. ‘டூட்டர்’ (Tooter) என்று பெயரிடப்பட்ட இது, பெரும்பாலும் தன்னை இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு சுதேசி சமூக வலைத்தளமாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க தளமான ட்விட்டரைப் (Twitter) போலவே Tooter-ரும் வெள்ளை மற்றும் நீல நிற ஸ்கீமையும், அதே போன்ற இடைமுகத்தையும் கொண்டுள்ளது. ‘சுதேசி ஆந்தோலன் 2.0’ என்ற பிரச்சார கூற்றோடு இந்த தளாம் காணப்படுகிறது.


இந்த தளம் ஜூன்-ஜூலை முதல் செயலில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது நேற்றுதான் திடீரென ட்விட்டரில் வைரலாகியது. மக்கள் தற்போது இத்தளத்தைப் பற்றி அதிகம் பேசத் தொடங்கியுள்ளனர்.


இந்த சுதேசி சமூக வலைத்தளத்தைப் (Social Websites) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:


 1. டூட்டர் ட்விட்டரின் அதே இயக்கவியலைப் பின்பற்றுகிறது. இதிலும் ஒரு பயனர் username மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் ஒரு அகௌண்டை உருவாக்கலாம், பிற அகௌண்டுகளைப் பின்பற்றலாம், பிற அகௌண்ட்களின் இடுகைகளைப் படிக்கலாம், அத்துடன் குழுக்கள் மற்றும் பட்டியல்களைத் தனிப்பயனாக்கலாம்.


2. டூட்டருக்கு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) ஒரு வலை பயன்பாடு மற்றும் ஆண்ட்ராய்டு பயன்பாடு உள்ளது. ஆனால் இப்போது இது iOS சாதனங்களுக்கு ஆப் ஸ்டோரில் இல்லை.


3. உங்கள் ட்விட்டர் பதிவுகள் ‘tweets’ என்று அழைக்கப்படுவதைப் போலவே, நீங்கள் டூட்டரில் இடுகையிட்டால் அது ‘‘toots’’ என்று அறியப்படும்.


4. டூட்டரின் சின்னம் ஒரு நீல சங்கு ஓடு.


5. இந்த ‘சுதேசி’ சமூக வலைத்தளத்தின் முக்கிய நோக்கம் அதன் “About Section”-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்தியாவில் ஒரு சுதேசி சமூக வலைத்தளம் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நமக்கென்று ஒரு சமூக வலைத்தளம் இல்லையென்றால், நாமும் அமெரிக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் டிஜிட்டல் காலனியாக மட்டுமே காணப்படுவோம். இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் நாம் இருந்ததைப் போலதான். இரண்டுக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. டூட்டர் நமது சுதேசி புரட்சி 2.0. இந்த பிரச்சாரத்தில் எங்களுடன் சேருங்கள்!" என்று அதில் எழுதப்பட்டுள்ளது. டூட்டர் பிரைவேட் லிமிடெட் தெலுங்கானாவின் கம்மத்தில் உள்ள ப்ளாட் எண் 48, ஸ்ரீசிட்டி, பாருகுடெம் என்ற முகவரியில் உள்ளது என நிறுவனத்தின் வலைப்பக்கம் கூறுகிறது.


ALSO READ: Alert மக்களே: Whatsapp OTP Scam பற்றிய இந்த முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


5. டூட்டரில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கிரண் பேடி, ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி, சத்குரு மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட், மகேந்திர சிங் தோனி (MS Dhoni) உள்ளிட்ட பல முக்கிய பயனர்கள் இருப்பதாகத் தெரிகிறது. டூட்டரில் பாஜகவுக்கு அதிகாரப்பூர்வ அகௌண்ட் உள்ளது. இருப்பினும், இந்த நபர்களிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் இதுவரை வரவில்லை.


6. ஒரு லைவ்மின்ட் அறிக்கையின்படி, முக்கிய நபர்கள் டூட்டரில் தாங்களே டூட்டிங் செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் ட்விட்டரில் போட்டுள்ள இடுகைகளின் நகல்கள் டுட்டரிலும் காணப்படுகின்றன.


7. டூட்டரில் ஒருவர் பதிவு செய்யும் போது, ​​அது தானாகவே மூன்று ப்ரொஃபைல்களை ஃபாலோ செய்யத் தொடங்குகிறது - ஆர் வைத்தியநாதன் (rvaidya2000), நந்தா (டூட்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி) ‘நியூஸ்’ என்ற ஒரு ஹேண்டில்.


8. பேச்சு, மதம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் அமெரிக்க அரசியலமைப்பால் வகுக்கப்பட்டுள்ள ‘ஃபர்ஸ்ட் அமெண்ட்மெண்டிற்கு’ கட்டுப்படுவதாகவும் டூட்டர் உறுதியளிக்கிறது.


9. டூட்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ‘டூட்டர்ப்ரோ’ பயன்படுத்த ஆண்டுக்கு ரூ .1000 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10. பயனரின் ஃப்ரொஃபைலின் உள்ளடக்கமான பயனரின் மின்னஞ்சல் முகவரி, பயனரின் இணைய இணைப்பு பற்றிய தகவல் மற்றும் வலைத்தளம் மற்றும் பயன்பாட்டு விவரங்களை அணுக ஒரு பயனர் பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகிய தகவல்களையும் டூட்டர் சேகரிக்கிறது. 


ALSO READ: BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! விரைவில் தொடங்கப்படுகிறது 4 ஜி சேவை!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR