இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துவிட்டது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இல்லாத வாழ்க்கை 20 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என்பதே பதிலாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், தற்போது வரை இலவசமாக இருந்த சேவைகள், கொஞ்சம் கொஞ்சமாக கட்டண முறைக்கு மாற்றப்படுகின்றன. கூகுளில் புகைப்படங்கள் சேமித்து வைக்கும் வசதியை உதாரணமாகச் சொல்லலாம்.


அதேபோல், ட்விட்டர் அதன் கட்டண சந்தா மாதிரியை எதிர்வரும் மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிவிட்டர் நிறுவனம் இப்போது ஒரு வருடமாக "ட்விட்டர் ப்ளூ" என்று பரவலாக அறியப்படும் நவீன மாடலில் பணியாற்றி வருகிறது, அது கட்டண சேவையாக இருக்கும். அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் என்ன தெரியுமா?


Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!


ட்விட்டர் ப்ளூ (Twitter Blue) விலை என்ன? 


ட்விட்டர் ப்ளூ சந்தா மாடலின் விலை மாதத்திற்கு $2.99 (தோராயமாக 218 ரூபாய்) இருக்கலாம்.


ட்விட்டர் ப்ளூ " Collections "


புதிய மற்றும் வரவிருக்கும் அம்சங்களை உன்னிப்பாக கவனிப்பவர்கள் ஒரு பயனர், அதில் “Collections” என்ற அம்சம் இருப்பதாகவும், இது பயனர்கள் முக்கியமான ட்வீட்களை சேகரித்து அவற்றை ஒரே இடத்தில் சேமிக்க அனுமதிக்கும் என்று கூறுகின்றனர். இது முக்கியமான டிவிட்டர் பதிவுகளை கண்டறிவதை சுலபமாக்குகிறது.


ட்விட்டர் ப்ளூ "புக்மார்க்குகள் தொகுப்புகள்" (Bookmarks Collections) 


டிவிடர் ப்ளூவில் " Bookmarks Collections" என்ற சிறப்பம்சம் இருக்கும். இதன் மூலம் பயனர்கள் வெவ்வேறு இடங்களில் புக்மார்க் செய்ய முடியும் - இது ஒரு வகையான கோப்புறை அடிப்படையிலான சேமிப்பு மாதிரி (folder-based storage model) ஆகும்.


Also Read | Corona Updates: தொடர்ந்து 5வது நாளாக புதிய பாதிப்பை விட மீட்பு விகிதம் அதிகம் 


ட்வீட்களைச் நீக்குவது (Undo Tweets)


நிறுவனம் தனது கட்டண வாடிக்கையாளர்களுக்கு "ட்வீட்களை நீக்குவதற்கான" வாய்ப்பை வழங்க உள்ளது. அடிப்படையில், இது பயனர்கள் பிழைகள் அல்லது முரண்பாடுகளைக் கொண்ட ஒரு ட்வீட்டை விரைவாக நீக்க அனுமதிக்கும். இந்த தெரிவு, ட்வீட்டை இடுகையிட்ட உடனே சிறிது நேரம் வரையில் இருக்கும். இது தனிப்பயனாக்கக்கூடிய அம்சமாக இருக்கும், 


கூடுதலாக, அசல் ட்வீட், பயனர் பதில்கள், மேற்கோள் மறு ட்வீட் (original tweets, user replies, quote retweets) போன்ற அனைத்து விருப்பங்களும் எங்கு பயன்படுத்தப்படலாம் என்பதை பயனர்கள் தீர்மானிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.


ட்விட்டர் ப்ளூ பல சந்தா மாதிரிகளைக் (subscription models) கொண்டிருக்குமா?  ட்விட்டர் சந்தா, அடுக்கு அடிப்படையில் (tier-based) இருக்கும், பயனர்கள் அவர்கள் செலுத்தும் கட்டணத்தின் அடிப்படையில் அம்சங்களை பெற முடியும்.


Also Read | மனைவி, ஆசைநாயகி இருவருக்கும் மரண காப்பீட்டுத் தொகை பிரித்து கொடுக்கப்பட்ட விநோதம் 


கட்டண சேவைகள் குறித்து ஜூலை 2020 இல், குறிப்பிட்ட ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி (Twitter CEO Jack Dorsey), நிறுவனம் தனது கட்டண சேவைகளை தொடங்கும் போது, அது மிகவும் உயர்தரமானதாக இருக்கும் என்று கூறினார்.


இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது. கட்டண செயல்பாடு விளம்பரங்களை முற்றிலுமாக அகற்றுமா என்பதும் தெரியவில்லை.  


டிவிட்டரின் இந்த கூடுதல் அம்சங்களுக்காக நீங்கள் பணம் செலுத்தத் தயாரா?  


Also Read | தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR