IMD on Cyclone Tauktae: தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்

தீவிரமடையும் டவ் தே புயல், மணிக்கு 175 கிலோமீட்டர் என்ற வேகத்தில் மே 18ஆம் தேதியன்று குஜராத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2021, 09:25 AM IST
  • தீவிரமடையும் டவ் தே சூறாவளிப் புயல்
  • மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்
IMD on Cyclone Tauktae: தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும் title=

புதுடெல்லி:  தீவிரமடைந்துள்ள சூறாவளி புயல் டவ் தே, மே 18ஆம் தேதிக்குள் குஜராத் கடற்கரையை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஞாயிற்றுக்கிழமை காலை (மே 16, 2021) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில், டவ் தே (Tauktae) சூறாவளி புயல் அரேபிய கடலை மையமாகக் கொண்டு பஞ்சிம்-கோவாவிலிருந்து 170 கிமீ தென்மேற்கிலும், மும்பைக்கு 520 கிமீ தெற்கிலும் மையம் கொண்டுள்ளது.

"இது மிகவும் கடுமையான சூறாவளி புயலாக (severe cyclonic storm) தீவிரமடைய வாய்ப்புள்ளது. பாவ்நகர் மாவட்டம், போர்பந்தர் & மஹுவா இடையே மே 18 அதிகாலையில் புயல் கடக்கக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read | Petrol diesel price today May 16 2021: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டவ் தே சூறாவளி குஜராத் கடற்கரையை 175 கி.மீ வேகத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும், ஜுனகத் மற்றும் கிர் சோம்நாத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடும்,

மேலும் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் டியு மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யும். போர்பந்தர், தேவ்பூமி துவாரகா, அம்ரேலி, ராஜ்கோட், ஜாம்நகர் ஆகிய மாவட்டங்களில் அடைமழை பொழியும்.

குறிப்பாக சவுராஷ்டிரா மாவட்டங்களான தேவ்பூமி துவாரகா, கட்ச், போர்பந்தர், ஜுனகத் போன்ற மாவட்டங்களில் சூறாவளி புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் குஜராத் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Also Read | ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு

மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வடமேற்கு அரபிக் கடல் மற்றும் குஜராத் கடற்கரையிலும் மீன்பிடி நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

175 கி.மீ வேகத்தில் வீசும் சூறாவளி டவ் தே, ஐந்து மாநிலங்களில் கனமழை முதல் அடைமழை வரை பெய்யச் செய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், கிர் சோம்நாத், அம்ரேலி, போர்பந்தர், துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட், கட்ச், மோர்பி, சூரத், காந்திநகர், வல்சாத், பாவ்நகர், நவாசரி, பருச் மற்றும் குன்ஜரத் மாவட்டங்களில் தேசிய பேரிடர் பதிலளிப்பு படை (National Disaster Response Force) குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. டக்தே சூறாவளியைக் கருத்தில் கொண்டு 100 க்கும் மேற்பட்ட அணிகளை உருவாக்கியுள்ளதாக NDRF தெரிவித்துள்ளது.

Also Read | தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சம்: இன்று 33,658 பேர் பாதிப்பு, 303 பேர் பலி

தாக்தே சூறாவளியினால் ஏற்படக்கூடிய இடர்களை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையின் 16 போக்குவரத்து விமானங்களையும் 18 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  

மகாராஷ்டிராவில், சனிக்கிழமை ரத்னகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read | 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு அறிவிப்பு

மேற்கு மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதி முழுவதிலும் மலைப்பாங்கான பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஆரஞ்சு எச்சரிக்கையை (அதாவது கனமழை முதல் அடை மழை பெய்ய வாய்ப்புள்ளது) வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ளது.

முன்னதாக சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி, டக் தே சூறாவளியிலிருந்து எழும் இடர்ப்பாடுகளை சமாளிக்க சம்பந்தப்பட்ட மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் தயார்நிலையை மறுஆய்வு செய்தார், மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் பராமரிப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு சேதம் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக மீட்டெடுக்கவும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Also Read | இன்றைய ராசிபலன், 16 மே 2021: விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News