பிளிப்கார்ட் தள்ளுபடி சலுகை: ரியல்மீ தனது ஸ்மார்ட்போன்களில் பல வித அற்புதமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை புத்தாண்டு நேரத்திலும் தொடர்கின்றன. அன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு இருக்கும் ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன், ஸ்டைலான வடிவமைப்புடன் வருவதோடு, இதில் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தள்ளுபடியும் கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்ட்டில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன் எது? அதில் கிடைக்கும் சலுகை என்ன?


ரியல்மி 9 (128 ஜிபி, 6 ஜிபி ரேம்) மாறுபாட்டில் கிடைக்கும் சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20999 ஆகும். எனினும் பிளிப்கார்ட் தரப்பில் இதில் ஏற்கனவே 19% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு அதன் லிஸ்டட் ப்ரைஸ் ரூ. 13,999 ஆகி விடும். 


எனினும், வாடிக்கையாளர்கள் விரும்பினால், இதில் இன்னும் அதிக தள்ளுபடியைப் பெறலாம். பிளிப்கார்ட் இதில் அளிக்கும் ஒரு சலுகையின் மூலம் இதில் வாடிக்கையாளர்கள் இதுவரை இல்லாத மிகப்பெரிய டீலைப் பெறலாம். இதன் பிறகு குறையும் ஸ்மார்ட்போனின் விலையை நீங்களே நம்ப மாட்டீர்கள்.


மேலும் படிக்க | BSNL ரூ.107 ரீசார்ஜ் பிளான், 40 நாட்கள் வேலிடிட்டி, டேட்டா மற்றும் காலிங் நன்மை 


இந்த போனில் மிகப்பெரிய பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது


ரியல்மீ 9 ஸ்மார்ட்போனின் லிஸ்டட் ப்ரைஸ் ரூ. 13,999 ஆகும். இந்த விலையிலும் இன்னும் தள்ளுபடியை பெற முடியும். ஏனெனில் ஸ்மார்ட்போனில் பிளிப்கார்ட் மூலம் ரூ. 10,250 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற போனஸ் வழங்கப்படுகிறது. எனினும், இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெற, வாடிக்கையாளர்கள் தாங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருப்பதையும், லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். 


இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டால், ரியமீயின் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து ரூ. 10,250 கழிக்கப்படும். அதன் பிறகு வெறும் 3,749 ரூபாயில் வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்கலாம். நேர்த்தியான அமசங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் இவ்வளவு குறைவான விலையில் கிடைப்பது மிக நல்ல டீல் ஆகும். 


மேலும் படிக்க | Instagram இல் குறிப்பிட்ட பழைய செய்திகளை எவ்வாறு பெறுவது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ