Vivo V21 5G இந்தியா வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி ஏப்ரல் 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Vivo V21 5G இல் 44 மெகாபிக்சல் செல்பி கேமராவை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஸ்மார்ட்ஃபோனிற்காக பிளிப்கார்ட்டில் (Flipkart) ஒரு பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது, அது வெளியீட்டு தேதி மற்றும் ஸ்மார்ட்ஃபோனின் (Smartphone) சில அம்சங்களை உறுதிப்படுத்துகிறது.


புதிய Vivo V21 5G ஸ்மார்ட்ஃபோன் ஆனது ஏப்ரல் 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்னர் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக இந்த புதிய ஸ்மார்ட்ஃபோன் ஐ நீங்கள் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை விவரம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த மாடல் 'V' தொடரின் மற்ற ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே ஆக்ரோஷமாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். Vivo V20 2021 தற்போது இந்தியாவில் ரூ.22,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதே அளவிற்கு இல்லை என்றாலும் கூட Vivo V21 5G ஸ்மார்ட்ஃபோன் (5G Smartphone) இதைசுற்றி அல்லது இதை விட சற்றே அதிகமான விலை நிர்ணயத்தை பெறலாம்.


ALSO READ | விரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு!


Vivo V21 5G ஸ்மார்ட்ஃபோன் அம்சங்கள்:
Vivo V21 5G மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்ஃபோன் 64MP முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராக்களை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டிருக்கும். Vivo V21 5G மாடல் ஆண்ட்ராய்டு 11 OIS மூலம் இயங்கும் மற்றும் இது ஹைப்ரிட் சிம் ஸ்லாட்டுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.


ஃபெர்பார்மன்ஸ் Qualcomm Snapdragon 732G
டிஸ்பிளே 6.53 inches (16.59 cm)
சேமிப்பகம் 128 GB
கேமரா 64 MP + 13 MP + 8 MP + 2 MP
பேட்டரி 4500 mAh
விலை 27999
ரேம் 8 GB
கைரேகை சென்சார் அமைந்திருக்கும் இடம் On-Screen

 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR