புதுடெல்லி: நவம்பர் 1 திங்கள் முதல், வாட்ஸ்அப் பல ஆண்ட்ராய்டு சாதனங்களை சப்ப்ர்ர்ட் செய்யாது. எனவே, பயனர்கள் தங்கள் சேட்களையும், பிற தகவல்களையும் சேமித்து வைக்கவில்லை என்றால், அவற்றை இழக்க நேறிடலாம். WhatsApp சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் அதற்கு இணக்கமான சாதனத்திற்கு மாற வேண்டும். ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பிந்தைய வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள்  மாடல்களிலும், ஆப்பிள் ஐபோன்களில் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் மாடல்களிலும் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்கள் முதல், ஆண்ட்ராய்டு 4.0.4 மற்றும் முந்தைய பதிப்புகளில் இயங்கும் போன்களை இனி ஆதரிக்காது என்று WhatsApp அறிவித்துள்ள நிலையில் காலக்கெடுவிற்கு முன், பாதிக்கப்பட்ட பயனர்கள் இணக்கமான சாதனத்திற்கு மாறி, அவர்களின் சேட் தகவல்களை சேமிக்க வேண்டும்.


உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் WhatsApp இயங்குமா, இயங்காதா என்பதை சர்பார்க்கும் முறை


கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் WhatsApp இயங்குமா, இயங்காதா என்பதை சரிபார்க்கலாம்


1. உங்கள் போனில் செட்டிங்க்ஸ் > ஃபோனை என்பதை தேர்வு செய்யவும்


2. உங்கள் சாதனம் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்குகிறது என்பதைக் காண  ஸ்க்ரோல் செய்யவும்


ALSO READ: JioPhone Next: Cheapest 4G ஸ்மார்ட்போன், எந்த போனும் பக்கத்தில் நீற்கக்கூட முடியாது 



3. இது ஆண்ட்ராய்டு 4.0.4 அல்லது அதற்கும் குறைவானதாக இருந்தால், ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பில் இயங்கும் சாதனத்திற்கு அதனை அப்டேட் செய்ய முடியுமா என்பதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.


4. நீங்கள் பாதிக்கப்பட்ட பயனர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் சேட்களின் காப்புப்பிரதியை உருவாக்குவதன் மூலம் அல்லது தனிப்பட்ட அல்லது க்ரூப் சேட் விபரங்களை தனித்தனியாக இன்போர்ட் செய்வதன் மூலம் தரவுகளை பாதுகாக்கலாம்.


5. WhatsApp சேட் விபரங்களை சேமித்து வைக்க, Settings > Chats > Chat backup > Back up என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஒரு குழு அல்லது தனிப்பட்ட உரையாடலைத் திறந்து, உங்கள் திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி ஆப்ஷனை பயன்படுத்தி தகவல்களை இம்போர்ட் செய்யலாம்.


6. நீங்கள் இப்போது More > Export Chat தேர்ந்தெடுத்து  ஆடியோ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றையும் சேமிக்க  இம்போர்ட் சேட் என்பதை தேர்ந்தெடுக்கலாம்.


ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுடன், WhatsApp தற்போது iOS 10 இல் இயங்கும் iPhone ஐ ஆதரிக்கிறது (iPhone 5 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள்) மற்றும் புதிய பதிப்புகள் மற்றும் KaiOS 2.5.0 ஆப்ரேடிங் சிஸ்டம் உள்ள Jio Phone மற்றும் Jio Phone 2 போன்ற அம்சத் தொலைபேசிகளை சப்போர்ட் செய்கிறது. 


ALSO READ: பிளிப்கார்ட் சேலில் படு டிமாண்டில் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR