JioPhone Next: Cheapest 4G ஸ்மார்ட்போன், எந்த போனும் பக்கத்தில் நீற்கக்கூட முடியாது

JioPhone Next திருப்பதி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Neolync தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும். JioPhone Next ஆனது பிரகதி OS ஐப் பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2021, 11:28 AM IST
  • ஜியோபோன் நெக்ஸ்ட் குறைந்த விலையில் அதிக வசதிகளை வழங்குகிறது.
  • ஜியோபோன் நெக்ஸ்ட் உடன் வேறு எந்த ஃபோனும் போட்டியிட முடியாது.
  • ஜியோபோன் நெக்ஸ்ட்டின் விலை சுமார் ரூ.3,499 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JioPhone Next: Cheapest 4G ஸ்மார்ட்போன், எந்த போனும் பக்கத்தில் நீற்கக்கூட முடியாது title=

நவம்பர் 4 ஆம் தேதி அதாவது தீபாவளியில் JioPhone Next போன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. JioPhone Next, Google மற்றும் Qualcomm போன்ற தொழில்துறை தலைமை நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது. JioPhone Next திருப்பதி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Neolync தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும். JioPhone Next ஆனது பிரகதி OS ஐப் பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஜியோ (Jio), தொலைபேசியின் விலையை வெளியிடவில்லை. ஆனால் இந்த போனில் இருக்கக்கூடிய மிகப்பெரிய அம்சங்களைப் பற்றி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைப் பார்த்தால் வேறு எந்த ஃபோனும் இந்த போனுக்குப் போட்டியாக இருக்காது என்று தோன்றுகிறது. பல தரப்புகள் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சியிலும் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

ஆராய்ச்சி இதை வெளிப்படுத்தியது

இந்தியாவில் உள்ள மக்கள் பணத்திற்கு அதிக மதிப்பளிக்கும் ஸ்மார்ட்போன்களை விரும்புகிறார்கள் என்பதை பல சந்தை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சிறந்த கேமராக்கள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விரும்புகிறார்கள்.

குறைந்த விலையில் அதிக வசதிகளை வழங்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் உடன் வேறு எந்த ஃபோனும் போட்டியிட முடியாது. இந்த நேரத்தில் JioPhone Next இன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதற்கு இந்திய சந்தையில் இப்போதைக்கு எந்த போட்டியாளர்களும் இல்லை.

ALSO READ: Jio அதிரடி: இந்த பிளானில் இலவசமாக போன் கிடைக்கும், முழு விவரம் இதோ!! 

JioPhone Next முன் எந்த ஃபோனும் போட்டியாக நிற்க முடியாது

டெகார்க் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை ஆய்வாளர் பைசல் கவூசா கூறுகையில், “பிரகதி ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த போனின் செயல்திறனை குறிப்பாக நாம் கவனிக்க வேண்டும். இதில் எந்த வகையான மேம்பாடு உள்ளது எம்பதையும் இது கூகுள் ஆண்ட்ராய்டு கோ-வில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் சரிபார்க்க வேண்டும். இந்த போனின் செயல்பாடு சிறப்பாக இருந்தால், குறைந்த விலையில் அதிக வசதிகளை வழங்கும் இந்த போனின் முன் மற்ற போன்கள் நிற்கக்கூட முடியாது.” என்றார்.

ஜியோபோன் நெக்ஸ்ட்: அம்சங்கள்

ஜியோபோன் நெக்ஸ்ட், முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு உதவும் வகையில் வாய்ஸ் அசிஸ்டண்ட், ரீட் அலவ்ட், டிரான்ஸ்லேட் போன்ற ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டிருக்கும். இதில் 13MP பின் கேமரா இருக்கும். ஆனால் இதன் செல்ஃபி லென்ஸ் ரெசல்யூஷன் பற்றி இன்னும் தெரியவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டெர்னல் மெமரி வகைகளில் வரும் என நம்பப்படுகிறது. இந்த போனில் ஜியோ ஆப்ஸ் கிடைக்கும், இது மிகச் சிறந்ததாக இருக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்ட்டின் விலை சுமார் ரூ.3,499 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​ஜியோபோன் நெக்ஸ்ட் போனுக்கு சந்தையில் எந்த ஒரு போனிடமிருந்தும் கடுமையான போட்டி எதுவும் இருக்காது. தற்போதைய நிலவரப்படி, ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தை சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Jio Phone good news: இனி மிகக்குறைந்த விலையில் இந்த மலிவு விலை போனிலும் WhatsApp Calling செய்யலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News