துபாய் புர்ஜ் கலிபா அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ - வீடியோ
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவுக்கு அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா அருகே துபாயில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அசோசியேட்டட் பிரஸ் பத்திரிக்கையாளர் அந்த இடத்தை அடைந்த நேரத்தில், அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் விபரம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை.
எமிரேட்டில் அரசு ஆதரவு டெவலப்பரான எமாரின் 8 பவுல்வர்டு வாக் என்றழைக்கப்படும் அடுக்கு மாடி கட்டிட தொடரின் ஒரு பகுதியான 35 மடி கட்டிடத்தின் மீது தீப்பிழம்புகள் கொழுந்து விட்டு எரிவதைக் காணலாம்.
துபாயில் 35 மாடி கட்டிடத்தில் கொளுந்தி விட்டு எரியும் தீ
துபாய் போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உடனடியாக தீயை அணைக்க முயற்சி எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கருத்துக்கான கோரிக்கைக்கு Emaar எனப்படும் கட்டிட நிறுவனமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், துபாய் ஊடக அலுவலகமும் இது குறித்து எதுவும் கூறவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது... தகவல் அளித்த எலான் மஸ்க்!
சமீபத்திய ஆண்டுகளில் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த துபாயில் உயரமான கட்டிடங்களில் ஏற்பட்டு வரும் தொடர் தீ விபத்துக்கள், நாட்டில் பயன்படுத்தப்படும் உறைப்பூச்சு மற்றும் பிற பொருட்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறது.
முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று, புர்ஜ் கலீஃபாவிற்கு அருகிலுள்ள துபாயில் உள்ள மிகவும் உயர்தர ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் ஒன்றான அட்ரஸ் டவுன்டவுன் பகுதியில், இதே போன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் படிக்க | Twitter Layoff : 'இப்போ தான் வேல போச்சு' - ஜாலியாக அறிவித்த ட்விட்டர் பணியாளர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ