இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது... தகவல் அளித்த எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல் படுத்தி வருக்கிறார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2022, 04:24 PM IST
  • ட்விட்டரில் ப்ளூ டிக் (Blue tick) பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
  • ப்ளூ டிக் பயனர்கள், பார்க்கும் விளம்பரங்கள் பாதி அளவாக குறைக்கப்படும்.
  • ப்ளூ டிக் பயனர்கள் நீண்ட நேர வீடியோக்களை இடுகையிட முடியும்.
இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது... தகவல் அளித்த எலான் மஸ்க்! title=

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல் படுத்தி வருக்கிறார். முதல் வேலையாக ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார். 

எலோன் மஸ்க் இன்று டிவிட்டர் நிறுவன பணி நீக்கங்களுக்கு பதிலளிக்கையில், ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர்கள் இழப்பை நிறுவனம் சந்தித்து வரும் வேளையில், வேறு வழியில்லை என்று கூறினார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, சட்டப்பூர்வமாக வழங்கும் இழப்பீட்டு பலன்களை விட 50 சதவீதம் கூடுதல் இழப்பீட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் எலான் மஸ்க் கூறினார். மேலும், ட்விட்டரில் ப்ளூ டிக் (Blue tick) பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ட்விட்டர் நவம்பர் 5 முதல் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு $7.99 மாதாந்திர சந்தாக் கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சந்தா கட்டணம், முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது. iOS அப்டேட் பதிப்பு 9.34.3 கொண்ட iOS பயனர்களுக்கு மட்டுமே இந்த சந்தா கட்டணம் தொடங்கப்பட்டுள்ளது. Android பயனர்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | வேறு வழியே இல்லை... நாள் ஒன்றுக்கு $4 மில்லியன் இழப்பு: பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க்!

"இன்று முதல், நாங்கள் ட்விட்டர் புளூ டிக் அம்சத்தில், சிறந்த புதிய அம்சங்களையும் சேர்க்கிறோம், விரைவில் மேலும் பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்படும். இப்போது பதிவு செய்தால் $7.99/மாதம் என்ற அளவில் சந்தா தொகையுடன் ட்விட்டர் ப்ளூ டிக் பெறலாம்." என்று ட்விட்டர் ஆப் ஸ்டோர் புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

ப்ளூ டிக் பயனர்கள், பார்க்கும் விளம்பரங்கள் பாதி அளவாக குறைக்கப்படும். ப்ளூ டிக் பயனர்கள் நீண்ட நேர வீடியோக்களை இடுகையிட முடியும். மேலும் அவர்களது பதிவுகள், உள்ளடக்கம் பதில்கள் தேடல்களில் முன்னுரிமை தரவரிசையைப் பெறும். மேலும் "இது மோசடிகள், ஸ்பேம் மற்றும் போட்களின் தெரிவுநிலையைக் குறைக்க உதவுகிறது" என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் ஒருவர் எலான் மஸ்க்கிடம், இந்தியாவில் எப்போது ப்ளூ டிக் கட்டணம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம் என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், ஒரு மாதத்துக்குள் ப்ளூ டிக் கட்டணம் அமல்படுத்தப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். iOS ட்விட்டர் செயலி இந்தியாவில் நீல நிற டிக்கிற்கு ரூ.469 கட்டணம் என காட்டுகிறது. இருப்பினும், சந்தா விபரம் இன்னும் நாட்டில் வெளியிடப்படவில்லை என்பதால், இது சரியான விலையா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க | எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'... யார் இவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News