ஆப்கானில் பரிதாபம்: இரத்தவெறி கொண்ட பயங்கரவாதி ஆப்கானின் புதிய உள்துறை அமைச்சர்!!
ஹக்கானி அமைப்பின் நிறுவனரது மகனான சிராஜ் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காபூல்: அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய தாலிபான் பொறுப்பாளர் அரசாங்கத்தின் முக்கிய பகுதியாக இருப்பார் என கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு மிகவும் பிரபலமாக இல்லாத ஒரு நபரை தாலிபான் அமைப்பி தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சர் அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என்படு குறிப்பிடத்தக்கது.
ஹக்கானி அமைப்பின் நிறுவனரது மகனான சிராஜ் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் (Afghanistan) புதிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாலிபான் அமைப்பு அனைத்து பயங்கரவாத இயக்கங்களுடனும் தன்னுடைய உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே கூறியுள்ளார். இருப்பினும், ஹக்கானி இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவருக்கு தாலிபான் அமைப்பு தனது அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பை அளித்துள்ளது.
இதற்கிடையில், தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், புதிய அமைச்சரவை பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணிகளை உள்ளடக்கிய மாறுபட்ட குழுவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ALSO READ: தாலிபானை ஆள இருக்கும் முல்லா பராதர் பாகிஸ்தான் குடிமகனா; வைரலாகும் பாஸ்போர்ட் படம்..!!
சிராஜுதீன் ஹக்கானி யார்?
எஃப்.பி.ஐ வலைத்தளத்தின்படி, பாகிஸ்தானில் (Pakistan), குறிப்பாக வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மீராம் ஷா பகுதியில் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் சிராஜுதீன் ஹக்கானியை பிடிக்க உதவும் தகவலை அளிப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு தாலிபான் மற்றும் அல்கொய்தாவுடன் நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2008 இல் காபூலில் உள்ள ஒரு ஹோட்டல் மீது நடந்த தாக்குதலில், ஒரு அமெரிக்கர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைக்காக அவர் தேடப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிரான எல்லை தாண்டிய தாக்குதல்களில் அவர் ஒருங்கிணைந்து பங்கேற்றதாக நம்பப்படுகிறது.
எஃப்.பி.ஐ இணையதளத்தில் சிராஜுதீன் ஹக்கானியின் ’வாண்டட்’ போஸ்டர்:
ஹக்கானி நெட்வொர்க் அல் கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. பல தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
"ஹக்கானி தாலிபானின் (Taliban) புதிய உள்துறை அமைச்சர். அவர் ஒரு இரத்தவெறி கொண்ட பயங்கரவாதி. அவரை பிடித்து தருபவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே பரிசை அரிவித்துள்ளோம்” என்று உளவுத்துறை செனட் தேர்வுக் குழு உறுப்பினர் செனட்டர் பென் சாஸ் கூறினார்.
தாலிபான்கள் செவ்வாய்க்கிழமை முல்லா முகமது ஹசன் அகுந்த் தலைமையிலான ஒரு இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தனர். முக்கியப் பதவிகளை கிளர்ச்சிக் குழுவின் உயர்மட்ட உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். ஹக்கானியைத் தவிர, துணைத் தலைவராக அப்துல் கனி பராதர், இரண்டாவது துணைத் தலைவராக மவ்லவி ஹன்னாஃபி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள்.
ALSO READ: பெண்கள் உரிமை பற்றி கேட்ட பெண் நிருபர், நக்கலாக சிரித்த தாலிபான்கள்: ஆப்கானில் பரிதாபம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR