ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, பலர் காயமடைந்தனர்
ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
AFP-யின் படி, இந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன. காயமடைந்தவர்களில் சுமார் 13 பேர் நகரத்தின் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாலிபான் (Taliban) செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி, வாராந்திர வெள்ளி பிரார்த்தனை வழிபாட்டில் பொதுவாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று மட்டும் கூறினார். இதைத் தாண்டி அவர் வேறு எந்த விவரங்களையும் அளிக்கவில்லை. இது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) உள்ள குண்டுஸ் நகரில் உள்ள சயித் அபாத் மசூதியில் குண்டுவெடிப்பு நடந்த ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த குண்டுவெடிப்பில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு நடந்துள்ள மிக மோசமான தாக்குதல் ஆகும் இது.
தாலிபான் ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, புதிய அரசாங்கத்தை அமைத்தது முதலே, ஆப்கான் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பல கொடுமைகளை மக்கள் ஏற்கனவே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த சூழலில் அவ்வப்போது நடக்கும் இது போன்ற குண்டுவெடிப்புகள் மக்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கும் வகையிலேயே உள்ளன.
ALSO READ: ஆப்கான் அரசியலில் பரபரப்பு; காபூல் திரும்பினார் முல்லா அப்துல் கானி பராதர்..!!
ALSO READ: ஆப்கானில் பயங்கரம்: குழந்தையை தூக்கிலிட்ட கொடூர தாலிபான்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR