‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை  தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்ததில் இருந்து, உலகம் அந்நாட்டின் நிகழ்வுகளை உற்று நோக்கி வருகிறது. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2021, 10:25 AM IST
‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்

தாலிபான்கள் (Taliban) ஆப்கானிஸ்தானை (Afghanistan) தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்ததில் இருந்து, உலகம் அந்நாட்டின் நிகழ்வுகளை உற்று நோக்கி வருகிறது. தலிபான்கள் 90 களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த போது பகிரங்கமாக, பொதுவில், கொடூரமான வகையில், மனிதாபிமானமற்ற முறையில் மரணதண்டனைகளை நிறைவேற்றினர். 

தாங்கள் மாறி விட்டோம் என அவர்கள் கூறி வருவதோடு, பாகிஸ்தான் சீன போன்ற நாடுகளும் அவர்களுக்கு உலக அரங்கில் இடம்பெற்று அங்கீகாரம் பெற வேண்டும் என பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், அவர்கள் வெளியிடும் அறிக்கைகள், பொது மக்கள் அங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்று விட வேண்டும் என மேற்கொள்ளும் முயற்சி ஆகியவை, அவர்கள் முகத்திரையை தினமும் கிழித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது,  மற்றொரு திடுக்கிடும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது. 

ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!

தாலிபானின் கடந்தகால ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற  பயங்கரமான மரணதண்டனைகள் மீண்டும் வழங்கப்பட உள்ளது என்று தாலிபானின் செல்வாக்கு மிக்க தலைவர்களுள் ஒருவரான முல்லா நூருதீன் துராபி (Mullah Nooruddin Turabi) கூறியுள்ளார். அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு கூறினார்.

‘எங்கள் நாட்டு சட்டங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு கூற முடியாது. நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவோம், குர்ஆனில் இருந்து தான் சட்டங்களை உருவாக்குவோம்’ என மிரட்டியுள்ளார். 90 களின் பிற்பகுதியில் தாலிபான் ஆட்சியின் போது நீதி அமைச்சராக துராபி இருந்தார். அவர் இப்போது சிறைச்சாலைகளின் பொறுப்பாளராக உள்ள அவர் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் சாத்தியமில்லை, ஷரியத சட்டமே ஆளும் என்பதை மீண்உ உறுதிபடுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானை மின்னல் வேகத்தில் தலிபான் கைப்பற்றியது. தலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள்  திரண்டனர்.

தலிபான்கள் தங்கள் ஆட்சி முன்பு இருந்ததை விட வித்தியாசமாக இருக்கும் என்று அவர்கள் கூறிய போது, அவர்கள் அறிவித்த அமைச்சரவையில்,  ஆண்கள் மட்டும் தான் உள்ளனர். அதோடு, அமைச்சர்கள் அனைவரும் ஐநாவின்  பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்ற நபர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.

ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News