Airbnb விடுதி ஒன்றில் தங்கிய விருந்தினர்கள் செய்த அட்டூழியத்தினால், உரிமையாளருக்கு  $1,570 பில் கட்ட வேண்இய நிலை ஏற்பட்டது. விருந்தினர்கள் தங்கள் முன்பதிவை ரத்து செய்ய முடியாமல் போனதால் பழிவாங்கும் வகையில் இதைச் செய்தார்கள். சீன தம்பதியினர் தென்கொரியாவுக்கு வந்து 25 நாட்கள் Airbnb மூலம் பதிஒவு செய்து வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இந்த தம்பதியினர் தங்கள் விடுமுறையின் போது சியோலில் தங்குவதற்காக பங்களாவை முன்பதிவு செய்த பிறகு பிரச்சனை தொடங்கியது. காரணம், பங்களா நகர மையத்தில் இல்லை, மாறாக புறநகரில் அமைத்துள்ளது என்பது தான் அதற்கு காரணம். இதை தம்பதியினர் அறிந்த போது, அவர்கள் முழுத் தொகையையும் ஏற்கனவே செலுத்திவிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 சீன தம்பதியினர்,  தன்னையோ அல்லது Airbnbஐயோ தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவர்கள் தாங்களாகவே அனைத்தையும் செய்ததாகவும் லீ கூறுகிறார். வளாகத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இருப்பதைப் பற்றி விசாரிக்க அவர்கள் ஆரம்பத்தில்  உரிமையாளரை லீயை போனில் அழைத்தனர். எதுவும் இல்லை என்று லீ கூறியபோது, அவர்கள் தங்களால் இயன்ற அளவு விளக்குகள், குழாய்கள், மின்சாதனங்கள் மற்றும் எரிவாயு வால்வுகளை ஆன் செய்தனர் என கூறப்படுகிறது.


தம்பதியினர் வில்லாவில் தங்குவதை விட தென் கொரியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததாக  பங்களா உரிமையாளர் மேலும் கூறினார்.  அவர்கள் 25 நாட்களில் ஐந்து முறை மட்டுமே பங்களாவிற்கு திரும்பி வந்தனர். அதிலும், ஒவ்வொரு முறையும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தங்கினர்.


மேலும் படிக்க | வாந்தியால் கலைந்த உலக டூர் கனவு! கப்பல் பயணத்தில் பாதியில் இறக்கி விடப்பட்ட நபர்!


தம்பதியர் வெளியேறிய பிறகு எரிவாயு சப்ளையர் லீக்கு போன் செய்து, பயன்பாடு கணிசமான அளவு அதிகரிப்பதைத் தெரிவித்தார். லீ வில்லாவை ஆய்வு செய்யச் சென்றபோது பவின் ஜன்னல்கள் திறந்திருந்தன மற்றும் எரிவாயு இயக்கப்பட்டது. அவருக்கு மூன்று பில்கள் வழங்கப்பட்டன: $116  என்ற அளவிற்கு தண்ணீர் பில் மற்றும் மின் கட்டணம் $730, எரிவாயு கட்டணம் மற்றும் $728 "இதர செலவுகள்"  என்ற அளவில் பில் வந்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த காலத்தில், தம்பதியினர் 120,000 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை செலவழித்துள்ளதாக அவர் கூறினார். இந்திய ரூபாயில் ரூ.1.28 லட்சம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.


சீன தம்பதிகள் செய்த இந்த செயல் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்திகளை பலர் பகிர்ந்து கொண்டனர். இதனால்,  Airbnb இன் பங்குகள் ஆறு சதவீதம் வரை சரிந்தன. கடைசி நேரத்தில் ரத்து செய்தல் மற்றும் பார்வையாளர்கள் தங்களுடைய அறைகளில் மறைக்கப்பட்ட கேமராக்களை கண்டறிதல் போன்ற பல ஆபத்தான நிகழ்வுகளையும் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. இந்தச் சிக்கலை Airbnb திருப்திகரமாகத் தீர்க்கவில்லை என கூறப்பட்ட  நிலையில்,  இந்த செய்தியால் அந்நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்தன.


ஏர்பிஎன்பிக்கான வருவாய் முந்தைய ஆண்டை விட 40 சதவீதம் அதிகரித்தது.கடந்த  2022 ஆம் ஆண்டு நிறுவனத்தின் மிகவும் லாபகரமான ஆண்டாகும். கூடுதலாக, 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட நிறுவனம், 16 சதவீதம் வருமான உயர்வை பதிவு செய்தது.


மேலும் படிக்க | சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம்! களம் இறங்க தயாராகும் ஜோ பைடன்!


மேலும் படிக்க | விமானத்தில் ரகளை செய்த பயணி... குடிபோதையில் விமான பணிபெண்ணிற்கு முத்தமிட்ட 61 வயது நபர்!


யார் அந்த நிக்கி ஹேலி


நிக்கி ஹேலி ஒரு விசுவாசமான குடியரசுக் கட்சியை சேர்ந்த நபர். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 51 வயதில், அவர் தனது இளமைப் பருவத்தைப் பயன்படுத்தி 80 வயதில் வரலாற்றில் மூத்த அமெரிக்க அதிபரான ஜோ பிடனுக்கு எதிராக நிற்க உள்ளார். நிக்கி ஹேலி இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறிய தம்பதிகளின் மகள். அவர்கள் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள். அவரது பெற்றோர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் - ராபர்ட் கென்னடி ஜூனியர், மரியன்னே வில்லியம்சன், ஆசா ஹட்சின்சன் மற்றும் ரான் டிசாண்டிஸ். 


மேலும் படிக்க | உயிரிழந்த 2 மணி நேரத்தில் நடந்த வியப்பான சம்பவம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ