ஹோட்டலில் மிஞ்சிப்போன உணவை சாப்பிட்டு... லட்சக்கணக்கில் பணத்தை சேமித்த ஐடியா மணி!
World Bizarre News: அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உணவகத்தில் மீந்துபோகும் உணவை சாப்பிட்டே பல லட்ச ரூபாய்களை சேமித்துள்ளார்.
World Bizarre News: உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமானவர்கள். சிந்தனை, யோசனை, செயல்பாடுகள், பழக்கவழக்கம் என்பது ஒவ்வொரு நபர்களுக்கும் மாறுபடும். மனிதர்கள் என்றில்லை இயற்கை முழுவதும் இதுதான். இந்த பன்முகத்தன்மைதான் இந்த பூமியையே ஒத்திசைவோடு இயங்க வைக்கிறது என்பது பல தத்துவஞானிகளின் கூறாகும்.
அதேபோல் தான், மனிதர்களில் பலரும் பண சம்பாதிப்பதிலும், பணத்தை செலவழிப்பதிலுமே வேறுபடுவார்கள். பணத்தை சிலர் தண்ணீராக செலவழிப்பார்கள், பலரோ மிக மிக சிக்கனமாக இருப்பார்கள். அதிகம் செலவழிப்பவர்களையும் இந்த உலகம் திட்டும், கஞ்சனாக இருப்பவரை நோக்கியும் முகம் சுழிக்கும். ஆனால், ஒரு நபர் தனது வினோத செயல் மூலம் பல லட்சங்களை சேமித்துள்ளார்.
வினோத செயல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஒருவர் பல உயர்தர உணவகங்களின் உணவுகளை சாப்பிட்டு, லட்சக்கணக்கில் ரூபாயை சேமித்த சம்பவத்தை இதில் காணலாம். இவரின் ஒரு வினோத பழக்கம் அவரை பணக்காரராக மாற்றியுள்ளது எனலாம்.
நியூயார்க்கில் உள்ள பல உயர்தர உணவகங்களில் மீந்துபோகும் உணவை உண்டு தனது வயிற்றை நிரப்பியுள்ளார். அதாவது, இதை முதலில் கேட்கும்போது, வறுமையின் பிடியில் அந்த நபர் சிக்கியிருக்கலாம் என உங்களுக்கு தோன்றும். ஆனால் அவர் வறுமையால் வாடவில்லை, இது சற்று வினோதமாக தோன்றலாம். ஆனால் இது ஆச்சர்யமளிக்கும் உண்மையாகும்.
மேலும் படிக்க | 16 வயது மாணவருடன் காரில் உடலுறவு... பெண் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்த போலீசார்!
தொழில்நுட்பம் மூலம்...
நியூயார்க் வாசியான அந்த நபரின் ஹானி மஹ்மூத். இவர் நியூயார்க்கின் அப்பர் வேஸ்ட் சைட் பகுதியில் வசித்து வருகிறார். அதாவது உலகின் மிக விலையுயர்ந்த நகரமாக நியூயார்க் பார்க்கப்படுகிறது. அந்த நகரத்தில் ஒருவர் வசிக்க வேண்டும் என்றாலே அவர் பெரும் செல்வந்தராக இருக்க வேண்டும். ஏனென்றால், ரியல் எஸ்டேட்டில் இருந்து அனைத்து விஷயங்களும் அங்கே விலை உயர்ந்ததாகும்.
மஹ்முத்திற்கு சாப்பிடுவது என்பது அதிக விருப்பமானதாகும். எனவேதான் இந்த வினோத முறையை அவர் கடைபிடிக்கிறார். மஹ்மூத் உயர்தர உணவகத்தில் சாப்பிட்டாலும் அவர் பல லட்சத்தை சேமித்துள்ளார். சாப்பிட முடியாமல் மீந்துபோகும் உணவுகளை சாப்பிடுவது என்றால் நீங்கள் குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து சாப்பிடுவார் என நினைக்க வேண்டாம், அவர் அதிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை செய்துள்ளார்.
2 வருடங்களில் ரூ.1.5 லட்சம்
அதாவது, TooGoodToGO செயலியை பயன்படுத்தி மஹ்முத் பல சுவையான உணவுகளையும் உண்டு, பணத்தை சேமித்துள்ளார். இந்த செயலி என்பது உயர்தர உணவகங்களில் இருந்து மிஞ்சிப்போகும் உணவுகளை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க பயன்படும்.
இந்த செயலியை பயன்படுத்தி மஹ்மூத் கடந்த 2 வருடங்களில் பல லட்சத்தை சேமித்துள்ளார். அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்திய மதிப்பில் 1.5 லட்சத்தை சேமித்துள்ளார். பொது மருத்துவத் துறையில் பணியாற்றும் மஹ்மூத், இந்த செயலியை பயன்படுத்தியது அவரது பட்ஜெட்டுக்கு சிறப்பாக உதவியுள்ளது.
அமெரிக்காவில் ஓராண்டுக்கு 80 டன் உணவுகள் வீணாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற செயலிகள் மூலம் உணவுகள் வீணாகாமல் தவிர்க்கலாம். பல மக்களும் உணவுகளை குறைந்த விலையில் பெறுவார்கள்.
மேலும் படிக்க | 25 வயது இளம்பெண்ணின் வினோத திருமணம்... 2 பொம்மைகளுடன் உறவு, 10 குழந்தைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ