அதிர்ஷடம்னா இதுதான்... பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி - கோடியில் புரளும் பெண்

America Lottery News: லாட்டரி மெஷினில் தவறான பட்டனை அழுத்தி பெற்ற லாட்டரி டிக்கெட் மூலம் ஒரு பெண்மணி பல கோடிகளுக்கு அதிபதியாக மாறிவிட்டார். இந்த சம்பவம் குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 6, 2024, 06:23 PM IST
  • இந்த சம்பவம் அமெரிக்காவின் வெர்ஜினியாவில் நடந்துள்ளது.
  • கடந்த மார்ச் 18ஆம் தேதி அந்த டிக்கெட்டை அவர் வாங்கியுள்ளார்.
  • அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் லாட்டரி அடித்துள்ளது.
அதிர்ஷடம்னா இதுதான்... பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி - கோடியில் புரளும் பெண் title=

America Lottery News: தமிழ்நாட்டில் லாட்டரி என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக தான் இருக்கும். தமிழ்நாட்டில் லாட்டரி என்ற முறையையே முற்றிலுமாக ஒழித்தவர் அவர்தான். ஏனென்றால், லாட்டரி மூலம் பல்வேறு குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இருப்பினும், இன்றும் கேரளா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் அரசே லாட்டரியை முறையாக நடத்திவருவதை நம்மால் காண முடிகிறது. இப்போதும் தமிழ்நாட்டில் இருந்து பலரும் கேரளாவுக்கு சுற்றுலா சென்றால் தங்களுக்கு தெரிந்துவர்களுக்கு உள்பட பலருக்கும் லாட்டரி சீட்டை வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

லாட்டரி மோகம்

அந்தளவிற்கு லாட்டரி மோகம் தமிழ்நாட்டில் இருக்கிறது. லாட்டரியை போல்தான் ஆன்லைன் சூதாட்டமும் தற்போது தமிழ்நாட்டில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், மக்கள் தங்களின் பணத்தை ஏதாவது ஒரு வழியில் பெருக்கிவிட வேண்டும் என்பதில் எப்போதும் குறியாக இருப்பார்கள், காரணம் பொருளாதாரச் சூழல் எனலாம்.

தற்போதைய கிரிக்கெட் சீசனில் Dream 11 போன்ற செயலிகள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றிருக்கவும் இதுதான் காரணம் எனலாம். மேலும், கேரளாவின் லாட்டரியிலோ அல்லது Dream 11 மூலமோ யாராவது பெரிய தொகையை பெற்றால் நம் மக்கள் அவர்களின் கதையை கேட்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், அமெரிக்காவில் ஒரு பெண்மணி லாட்டரியை பெறும் வெண்டிங் மெஷினில் தவறான பட்டனை அழுத்தி பெற்ற லாட்டரி சீட்டு மூலம் கோடிகளை அள்ளிய கதையை இங்கு காணலாம். 

மேலும் படிக்க | காதலனுடன் ஆசிரியர் செய்த காரியத்தை பாருங்க... குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - வாழ்நாள் தடை

1 மில்லியன் அமெரிக்க டாலர் 

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில்தான் இந்த சம்பவம் நடந்ததுள்ளது. மிரியம் லாங் என்ற அந்த பெண்மணி விர்ஜினியாவின் பிளாக்ஸ்பர்க் நகரில் உள்ள தெற்கு பிரதான தெருவில் உள்ள CVS ஸ்டோருக்கு சென்றுள்ளரார். அவர் அங்கிருந்த லாட்டரி வெண்டிங் மெஷினில் தவறான பட்டனை அழுத்தி ஒரு லாட்டரியை பெற்றிருக்கிறார். 

அதாவது, கடந்த மார்ச் 18ஆம் தேதி அந்த மெஷினில் அவர் Mega Millions என்ற லாட்டரி டிக்கெட்டை பெற நினைத்துள்ளார். ஆனால், தவறுதலாக அவர் Powerball Drawing என்ற டிக்கெட்டை பெற்றிருக்கிறார். அதில் Powerball Drawing லாட்டரி மரியம் லாங் பெற்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. அந்த லாட்டரி மூலம் அவர் 1 மில்லியன் அமெரிக்கா டாலரை பெற்றுள்ளார். தற்போதைய இந்திய மதிப்பின்படி அது ரூ.8.33 கோடியாகும். 

இதுகுறித்து மரியம் லாங் கூறுகையில்,"இதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த சிறந்த தவறாகும்" என்றார். குறிப்பாக இவ்வளவு பெரிய தொகையை பெற்றவுடன் அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாகவும் கூறினார். இதயத்துடிப்பே அதிகமாகிவிட்டது என்றும் கூறினார். இந்த தொகையை வைத்துக்கொண்டு அவர் செய்யப்போகிறார் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

வாழ்க்கை பாடம்

இந்த சம்பவத்தின் மூலம் நாம் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளலாம். பலரும் வாழ்க்கையில் சில சந்தர்பங்களில் பல தவறான முடிவுகளை எடுத்திருப்போம். கல்லூரி படிப்பு, வேலை, வாழ்க்கை துணை என பல விஷயங்களில் நாம் நினைத்து ஒன்றாக இருக்கும், ஆனால் கிடைத்தது ஒன்றாக இருக்கும். ஆனால் அதற்காக கவலை கொள்ள கூடாது. உங்களுக்கு கிடைத்து உங்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரலாம். குறைந்தபட்சம் என்றாவது ஒருநாள் சந்தோஷத்தின் உச்சத்திற்காவது கொண்டுசெல்லும் என நம்புங்கள். கண்டிப்பாக வாழ்வும் இன்பமாக இருக்கும். 

மேலும் படிக்க | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்... போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News