இராணுவத்தில் பெண்களுக்கு ponytail, lipstick அனுமதி: US Army அதிரடி அறிவிப்பு
அமெரிக்க இராணுவத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அமெரிக்க ராணுவம் தனது சீருடை விதிகளை திருத்தியுள்ளது.
தனது விதிமுறைகளில் ஒரு பெரிய திருத்தமாக, அமெரிக்க ராணுவம் தனது சீருடை விதிகளை திருத்தியுள்ளது. ராணுவத்தில் உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை போனிடெயிலாக போட்டுக்கொள்ளலாம் என்றும் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயங்களை பயன்படுத்தலாம் என்றும் ஆண்கள் தெளிவான நக பாலிஷ்களை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க (America) இராணுவத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்காகவும் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது உள்சட்டை ஒன்றை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றங்கள் பிப்ரவரி 24 முதல் நடைமுறைக்கு வரும்.
இது பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்கை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சி என்று கூறிய அமெரிக்க இராணுவம், பெண் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மாறுபட்ட தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்காக அதன் சீர்ப்படுத்தும் தரத்தை புதுப்பித்துள்ளது.
இந்த மாற்றங்கள் முந்தைய பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரின் கீழ் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மதிப்பாய்வின் விளைவாகும். இது இராணுவத்தில் இன பாகுபாடு மற்றும் சிறுபான்மையினர் தவறாக நடத்தப்படுவது பற்றிய பரிசோதனையின் ஒரு பகுதியாகும்.
கடந்த காலங்களில் நீண்ட தலைமுடி கொண்ட பெண்கள் அதை கொண்டையாக போட வேண்டியிருந்தது. இது அவர்களுக்கு அசௌகரியத்தை அளித்ததோடு, தலைக்கவசம் அணியும் போதும் அதிக பிரச்சனைகளைக் கொடுத்தது.
பணியாளர்களுக்கான இராணுவ துணைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் கேரி பிரிட்டோ கூறுகையில், "முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காண்பதற்கான எங்கள் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம். பின்னர் அனைத்து படையினரும் இராணுவத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாக இருப்பதை உணருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் கொள்கைகளை செயல்படுத்துகிறோம்."
"எங்கள் அணிகளுக்குள் அனைவரையும் உள்ளடக்கி அழைத்துச் செல்வது மற்றும் சமத்துவம் என்று வரும்போது செயல்கள் சொற்களை விட சத்தமாக பேசுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இன்று நாங்கள் அறிவித்த மாற்றங்கள் நம் மக்களுக்கு முதலிடம் கொடுக்கும் கொள்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.
படத்தில்: அமெரிக்க இராணுவம் சீர்ப்படுத்தும் தரநிலைகள் மற்றும் AR 670-1
இராணுவத்தின் இந்த முடிவு சமூக ஊடகங்களில் (Social Media) கலவையான பின்னூட்டங்களைப் பெற்றது. பலர் இந்த நடவடிகையை பாராட்டினர். சிலர் இதை கிண்டலும் செய்தனர்.
சேவையில் உள்ள பெண்கள் எவ்வாறு தங்கள் கூந்தலை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த அமெரிக்க விமானப்படை தனது விதிகளை மாற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ALDO READ: டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெறுமா.. அரசியல் வல்லுநர்கள் கூறுவது என்ன..!!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) திங்களன்று ஒரு உயர்நிலை ஆணையில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான, அவருக்கு முந்தைய அதிபரால் விதிக்கபட்ட, சர்ச்சைக்குரிய தடையை ரத்து செய்தது. இது எல்.ஜி.பீ.டி.கியூ ஆதரவாளர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதி ஒன்றையும் ஜோ பைடன் பூர்த்தி செய்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் உடனிருக்கையில் பைடன் ஓவல் அலுவலகத்தில் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதில் கையெழுத்திட்ட பிறகு, "இது ஒரு எளிய விஷயம். சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அந்த சேவையை வெளிப்படையாகவும் பெருமையுடனும் செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பான நாடாகிறது” என்று பைடன் ட்விட்டரில் கூறினார்.
ALSO READ: India: Khalistanis தொடர்பாக இத்தாலிக்கு கண்டிப்பு இங்கிலாந்துக்கு பாராட்டு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR