சிங்கப்பூரில் ( Singapore), கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், சில மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, இன்று நடைபெறும்  வாக்குப்பதிவில்,  சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்கின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா( Corona) தொற்று நோய் பரவி வரும் சூழ்நிலைக்கு மத்தியில், தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.


கொரோனா தொற்றுநோய் பரவும் அச்சம் இன்னும் இருப்பதால், தேர்தல் வாக்குபதிவில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


கொரோனா பரவலைத் தடுக்க, மக்கள் நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அமைக்கப்பட்ட வாக்குசாவடிகளை விட அதிக வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு 880 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. இன்றைய தேர்தலில் 1100 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன.


ALSO READ | "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..." தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் கிம் ஜாங் உன்


தேர்தல் அதிகாரிகள், வாக்களிக்க வரும் மக்களிடம் தனிநபர் விலகலை கடைபிடிக்க வலியுறுத்தினர்.  வாக்கு செலுத்த வரும் வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. மேலும் கைகளை சுத்திகரிக்க சானிடைஸர்கள் வழங்கப்பட்டன.


தேர்தல் பிரச்சாரம் ஜூலை எட்டாம் தேதி, அதாவது புதன்கிழமை அன்று முடிவுக்கு வந்தது.


சிங்கப்பூரில்( Singapore) கடந்த 61ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் கட்சியான பீப்பிள் ஆக்சன் பார்ட்டி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 45,000 க்கும் அதிகமான தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும்.சிஙக்ப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூர்  பீப்பிள் ஆக்‌ஷன் பார்டி (People's Action Party) என்னும் கட்சி தான் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி தான் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | மர்மமான முறையில் சியோல் மேயரின் மரணம்: அதிர்ச்சியில் மகளும் மக்களும்


இந்த கட்சி வெற்றி பெறால்,  தற்போதைய பிரதமர் லீ ஹ்சியன் லூங் (Lee Hsien Loong) மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார்.


சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தை  லீ குவான் யூவின் (Lee Kuan Yew)  மகனான Lee Hsien Loong 2004  ஆம் ஆண்டு முதல் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.