பாகிஸ்தான் நாடாளுமன்ற எம்பி மவுலானா சலாஹுதின் அயூப் 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார். இவர்  ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சித் தலைவரும் ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் (Pakistan) 16 வயதுக்கும் குறைவான பெண்களை மணப்பது சட்டப்படி குற்றம் என இருக்கும் நிலையில், ஒரு எம்பியே சட்டத்தை மீறியுள்ளார். சித்ரல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு  இந்த எம்பி  ஜுகுர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளது. பெண்கள் உரிமைகாகவும் நலனுக்காகவும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பதிவு செய்த புகாரின் அடிப்படையில்  போலீஸார் விசாரணையை தொடக்கியுள்ளனர்.

இதை அடுத்து இந்த விவகாரம் உலகுக்குத் தெரியவந்துள்ளது. எம் பி திருமணம் செய்து கொண்ட சிறுமி பள்ளியில் பயின்று வருவதோடு, அவர் திருமண வயதையும் எட்டவில்லை. எனவே, பாகிஸ்தான் எம்பி மவுலானா சலாஹுதின்  திருமணம் செல்லாது என்று மகளிர் அமைப்புகள்  கூறுகின்றன.. 


திருமணம் குறித்து அந்தப் பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளதாகவும் முறையான திருமண விழா இன்னும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


’’மாணவியின் பள்ளியில் உள்ள பதிவுகளில் பிறந்த தேதி அக்டோபர் 28, 2006 என பதிவாகியுள்ளது. இந்த நிலையில் எம்.பி. மவுலானா சலாஹுதின் திருமணம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது” என்று பாகிஸ்தான் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு, மகளிர் அமைப்பு அளித்த புகாரின் பேரில் சித்ரால் வீட்டின் தரூஷ் பகுதியில் உள்ள சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிறுமியின் தந்தை தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.


இக்குற்றச்சாட்டு குறித்து மவுலானாவின் தரப்பில் பலத்த மவுனம் நிலவுகிறது. இதுவரை எந்த பதிலும் இல்லை.


ALSO READ | வீட்டை அப்படியே வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா.. ஆம் என்கிறார் Phil Joy..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR