வீட்டை அப்படியே வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா.. ஆம் என்கிறார் Phil Joy..!

அமெரிக்காவில் 139 ஆண்டு பழைய விக்டோரியன் ஹவுஸ்  என்ற 2 மாடி கட்டிடத்தை வண்டியில் கட்டி வேறொரு இடத்திற்கு இழுத்து சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2021, 08:03 PM IST
  • அமெரிக்காவில் 139 ஆண்டு பழைய விக்டோரியன் ஹவுஸ் என்ற 2 மாடி கட்டிடத்தை வண்டியில் கட்டி வேறொரு இடத்திற்கு இழுத்து சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
  • சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு மாடி விக்டோரியன் வீடு புதிய முகவரிக்கு மாற்றப்பட்டது.
வீட்டை அப்படியே வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா.. ஆம் என்கிறார் Phil Joy..! title=

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் 139 ஆண்டு பழைய விக்டோரியன் ஹவுஸ்  என்ற 2 மாடி கட்டிடத்தை வண்டியில் கட்டி வேறொரு இடத்திற்கு இழுத்து சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

139 ஆண்டுகள் பழமையான விக்டோரியன் ஹவுஸ் என்ற இரண்டு மாடி கட்டிடத்தை மிகப்பெரிய சக்கரங்களில் ஏற்றப்பட்டு, புதிய முகவரிக்கு மாற்றப்பட்டது.

அமெரிக்காவில் (America) இந்த ஹவுஸ் மூவவிங் பணியை மேற்கொண்ட பில் ஜாய், இதற்காக 15 க்கும் மேற்பட்ட நகர நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று கூறினார். இந்த நடவடிக்கை மிகவும் நுட்பமானது என்று ஜாய் கூறினார், ஏனெனில்  முதலில் கட்டிடத்தை பூமியில் இருந்து பெயர்க்க வேண்டும்

பிப்ரவரி 21, 2021 ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோ வழியாக ஒரு டிரக் மூலம் விக்டோரியன் ஹோம் என்ற 139 ஆண்டு பழைய கட்டிடத்தை இழுத்து செல்வதை பலர் ஆர்வமுடம் வேடிக்கை பார்த்தனர். 1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, குடியிருப்பு ஒன்றை கட்ட இடம் கொடுக்கும் வகையில், ஆறு ப்ளாக்குகள் தொலைவில் ஒரு புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது

சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு மாடி விக்டோரியன் வீடு ஞாயிற்றுக்கிழமை புதிய முகவரிக்கு மாற்றப்பட்டது. விவரங்களின்படி, 807 பிராங்க்ளின் ஸ்ட்ரீட்டில் 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ஏறக்குறைய,  $200,000  டாலர் செலவானது என கூறப்படுகிறது

பெரிய ஜன்னல்கள் மற்றும் பழுப்பு நிற முன் கதவு கொண்ட இத 139 ஆண்டு கால பழையான வீட்டை, ஆறு ப்ளாக்குகள் தொலைவில் உள்ள புதிய முகவரிக்கு எடுத்து செல்ல மாபெரும் சக்கரங்களில் ஏற்றப்பட்டது.

மணிக்கு சுமார் 1 மைல் என்ற வேகத்தில் நகர்ந்த இந்த வீட்டை பார்க்க மக்கள் நடைபாதையில் கூடி புகைப்படம் எடுத்தனர்

வீட்டை கொண்டு செல்லும்வழியில், பார்க்கிங் மீட்டர்கள், போக்குரத்து விதி தொடர்பான போர்டுகள்  ஆகியவை அகற்றப்பட்டன.

ALSO READ | Facebook Vs Australia: மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்கிறது ஆஸ்திரேலியா..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News