இந்து கோவில் இடிக்கப்பட்ட போது பாகிஸ்தான் மவுனமாக வேடிக்கை பார்த்தது: இந்தியா

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டபோது, மவுனமாக கை கட்டி வேடிக்கை பார்த்த பாகிஸ்தானிற்கு, ஆன்மீக தலங்களை பாதுகாக்கும் ஐநா தீர்மானத்தில் பங்கேற்க அருகதை இல்லை என இந்தியா கூறியுள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 22, 2021, 03:03 PM IST
  • பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருந்த ஒரு இந்து கோவிலை உள்ளூர் முஸ்லீம் மதகுருமார்கள் சென்ற டிசம்பர் 30ம் தேதியன்று தீ வைத்து அழித்தனர்.
  • இந்த சம்பவத்தை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தனர்.
  • கோயிலை இடிப்பதை தடுக்க யாரும் முன்வரவில்லை.
இந்து கோவில் இடிக்கப்பட்ட போது பாகிஸ்தான் மவுனமாக வேடிக்கை பார்த்தது: இந்தியா

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டபோது, மவுனமாக கை கட்டி வேடிக்கை பார்த்த பாகிஸ்தானிற்கு, ஆன்மீக தலங்களை பாதுகாக்கும் ஐநா தீர்மானத்தில் பங்கேற்க அருகதை இல்லை என இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தானின் (Pakistan) கைபர் பக்துன்வா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் இருந்த ஒரு இந்து கோவிலை உள்ளூர் முஸ்லீம் மதகுருமார்கள் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், சென்ற டிசம்பர் 30ம் தேதியன்று தீ வைத்து அழித்தனர்.

இந்த சம்பவத்தை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தனர். கோயிலை இடிப்பதை தடுக்க யாரும் முன்வரவில்லை.

இந்து சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான இந்த செயலை உலகின் பல மனித உரிமை ஆர்வலர்களால் கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் பொதுச் சபை வியாழக்கிழமை “அமைதி மற்றும் சகிப்புத்தன்மை என்னும் கலாச்சாரத்தை மேம்படுத்த மத தலங்களைப் பாதுகாக்க வேண்டும் ” எனக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனித உரிமைகளை மதித்து, மத உணர்வுகளையும் பன்முகத்தன்மையையும் போற்றும் வகையில் அனைத்து நிலைகளிலும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவது குறித்த உலகளாவிய உரையாடலை வளர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கோருகிறது.

ALSO READ | இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்தது சரியே: Zakir Naik

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்த தீர்மானத்தில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க அருகதை இல்லை என்று கூறினார்.

"இந்து கோவிலின் மீது சமீபத்தில் நடத்த தாக்குதல் சம்வத்தின் போது, பாகிஸ்தான் மவுனமாக கை கட்டி வேடிக்கை பார்த்தது. பாகிஸ்தானில், சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. அங்கு சகிப்பு தன்மை என்பதே இல்லாத நிலையில், இந்த தீர்மானத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது மிகவும் முரண்பாடான செயல்” என்று திருமூர்த்தி கூறினார்.
பயங்கரவாதத்தை (Terrorism) ஊக்குவிக்கும் நாடு, அமைதிக்காக தீர்மானத்தில் பங்கேற்பது மிகவும் முரண்பாடான செயல் என அவர் தெரிவித்தார். 

ALSO READ | Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News