World Bizarre News: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா பே என்ற கடலுக்கு அருகே உள்ள பகுதியின் குடியிருப்பு வாசிகள் சில காலமாக தூக்கமில்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில் கேட்கும் சத்தமான ஒலியினாலும், சுவர்களில் ஏற்படும் அதிர்வுகளாலும் குழந்தைகள் உள்பட பலராலும் தூங்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த சத்தம் எதனால் வருகிறது என பல நாள்களாக அவர்களுக்கு தெரியவே இல்லை. எனவே, அதை சுற்றி பல கட்டுக்கதைகள் உலா வர தொடங்கின எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, பக்கத்தில் இருக்கும் ராணுவத் தளத்தில் இரவில் ரகசிய ஊடுருவலால் இந்த சத்தம் வருகிறது என்று ஒரு தரப்பும் மறைமுகமாவும் சட்டவிரோதமாகவும் இயங்கும் கிளப்களில் இருந்து இதுபோன்ற சத்தமும், அதிர்வும் ஏற்படுவதாகவும் கதைகள் உலா வருகின்றன. ஒரு சிலரோ அருகில் ஏலியன்களின் நடமாட்டம் இருப்பதாக கூட அச்சப்பட தொடங்கினர். இருப்பினும், இந்த சத்தம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அந்த சத்தம் எதன்மூலம் எழுகிறது என்பதை கண்டுபிடித்தனர். 


அவர்களின் ஆய்வறிக்கையின்படி, ஒரு மீனால் தான் இதுபோன்ற சகிக்க முடியாத சத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Black Drum என்றழைக்கப்படும் இந்த வகை மீன், தனது இணையுடன் உறவில் ஈடுபடும்போது இதுபோன்ற சத்தம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | உடலுறவு... 14 வயது மாணவன் வீட்டில் பலமுறை எகிறி குதித்த ஆசிரியை - 50 ஆண்டுகள் சிறை!


அமெரிக்காவின் சரசோட்டாவில் உள்ள கடல் ஆய்வகம் மற்றும் மீன்வளம் பிரிவில் பணிபுரியும் மீன் ஒலியியல் சார்ந்த நிபுணர் ஜேம்ஸ் லோகாசியோ, அப்பகுதியில் கடல் ஒலிவாங்கிகளை நிறுவி இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கேப் கோரல் என்ற பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் நடத்திய இதேபோன்ற ஆய்வில் இதே முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. 


இந்த Black Drum மீன் தண்ணீரில் குளிர்கால இனச்சேர்க்கையில் ஈடுபடும்போது, 165 Decibels வரை சத்தம் வெளிவரும் என தெரிகிறது. கூட்டமாக இந்த மீன்கள் இந்த சத்தத்தை ஏற்படுத்தும்போது, நிலத்தின் வழியாக இந்த சத்தங்கள் ஊடுருவும். நிலத்தில் இருப்பவர்களுக்கும் இந்த சத்தம் கேட்கும். இதுகுறித்து அந்த ஆய்வாளர் கூறுகையில்,"இது நகரத்தில் ஏற்படும் ஒரு வகையான மர்மமாகிவிடுகிறது. 


இதுசார்ந்த பல்வேறு கருத்துகளும் உலாவும். மக்களுக்கு இது என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகமிருக்கும், இருப்பினும், அது என்னவென்றுதான் உங்களுக்கு பிடிபடாது. மேலும், சமூக வலைதளங்கள் உங்கள் கையில் இருக்கும் நிலையில், இதுபோன்ற பல வித்தியாசமான தகவல்களை நீங்கள் பெறுகிறீர்கள்" என கட்டுக்கதைகள் குறித்த தனது பார்வையையும் பகிர்ந்துகொண்டார்.


மேலும் படிக்க | கணவனின் பிணத்துடன் குடும்பம் நடத்திய அமானுஷ்ய பெண்... அதுவும் 4 வருஷமாக... காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ