வீடு வாங்கலையோ வீடு! 5 பெட்ரூம் வீடு வாங்கினா டெஸ்லா கார் ஃப்ரீ
Buy One Home And Get Tesla Car Free: புதிதாகக் கட்டப்பட்ட ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினால், ஆடம்பர டெஸ்லா கார் ஒன்றை போனஸாக வழங்குவதாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ளது
நியூசிலாந்தில் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால், வீடுகளை விற்பதற்காக பல அதிரடி சலுகைகளை விற்பனையாளர்கள் வழங்குகிறார்கள். அதிரடி விலைக் குறைப்பு, அதிக தள்ளுபடி, நம்ப முடியாத சலுகைகள் என வீடுகளை மக்களுக்கு விற்க பலவிதமான யுக்திகளை ரியல் எஸ்டேட் துறையினர் மேற்கொண்டுள்ளனர். வீடு விற்காது என்ற அவநம்பிக்கையை போக்கி, வித்தியாசமாக முயற்சித்து சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் சுவாராசியமான விளம்பரம் ஒன்று, நிலைமையை புரிய வைக்கிறது.
புதிதாகக் கட்டப்பட்ட ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினால், ஆடம்பர டெஸ்லா கார் ஒன்றை போனஸாக வழங்குவதாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை தருகிறது. வித்தியாசமான ஆனால் லாபகரமான இந்த விளம்பரம் வெளிவந்த வேகத்திலேயே பலரும் பார்த்து ரசித்து அதனை வைரலாக்கி விட்டனர்.
வித்தியாசமான விளம்பரத்தில், "புத்தம் புதிய டெஸ்லா மற்றும் புத்தம் புதிய வீடு" என்று விளம்பரம் வெளிவந்து இருப்பதாக TVNZ 1 செய்தி சேனல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ
பார்ஃபூட் & தாம்சன் விற்பனை முகவர் கபில் ராணா இந்த யோசனையை முன்வைத்தார், வாகனம் சந்தை மதிப்பில் கூடுதல் விலைக்கு பதிலாக "போனஸ்" என்று கூறினார்.
நியூசிலாந்தில் டெஸ்லா கார்கள் சுமார் $72,400க்கு விற்கப்படுகின்றன. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வீட்டின் மதிப்பு சுமார் 1.8 மில்லியன் டாலர்கள் ஆகும். செவ்வாய்கிழமையன்று இந்த விளம்பரம் வந்த பிறகு, தனக்கு 50க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக ராணா கூறியுள்ளார்.
இது இருந்தபோதிலும், பல மாதங்களாக சந்தையில் காலியாக உள்ள 400 வீடுகளுடன், புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. அதிக வட்டி விகிதங்கள் காரணமாக வீடுகளுக்கான தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் படிக்க | 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு
இந்த வாரம் ரியல் எஸ்டேட் நிறுவனம் REINZ)வெளியிட்ட தரவுகளின்படி, வீட்டின் விலை ஆண்டுக்கு 10.9 சதவீதம் குறைந்து $825,000 ஆக இருந்தது. அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மொத்த அளவும் வியத்தகு அளவில் குறைந்துள்ளது: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 34.7 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 7,486ல் இருந்து 4,892 ஆக வீடுகளின் விற்பனை அளவு குறைந்துவிட்டது.
நியூசிலாந்தின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது, இது வீட்டுக் கடன் வட்டியையும் பாதித்துள்ளது. தேவை குறைந்ததை அடுத்து, வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தன.
மேலும் படிக்க | நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ