Canada Protest: கனடாவில் வலுக்கும் போராட்டம்; ஒடாவாவில் அவசர நிலை பிரகடனம்
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
கனடாவில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Tredeau) மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டின் தலைநகரில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின.
ALSO READ | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?
இந்நிலையில், கனடாவில் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. கனடாவின் ஒட்டாவாவில் கோவிட் தடுப்பூசி கட்டாய விதிகளுக்கு எதிரான ட்ரக்கர்களின் போராட்டம் முற்றிலும் கட்டுப்பட்டை மீறி வருவதாக கூறிய ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன், அவரச நிலையை அறிவித்துள்ளார். மேலும், போராட்டக்கரார்கள், ஹார்கன்கள், சைரன்கள் ஆகிஅய்வற்றை ஒலிக்க செய்து பொது மக்களுக்கு கடும் அங்கு பார்டி கொண்டாடி வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
போராட்டக்காரர்கள் இடைவிடாமல் ஏற்படுத்தும் ஹாரன்களின் ஒலி மிகவும் தொல்லை கொடுப்பதாக உள்ளது என்றும், போராட்டக்காரர்கள் பொது மக்களை துன்புறுத்ததுவதாகவும், அவமதிக்க்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் அல்லது தடுக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும், கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று டிரக்கர் ஓட்டுநர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எச்சரித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் கிடைக்கும் உதவுவதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எரிபொருள், உணவு கொடுத்து உதவுபவர்கள்கைது செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அமெரிக்க-கனேடிய எல்லையில் இறந்த இந்திய குடும்பம்: பனியில் உறைந்து உயிர் போன பரிதாபம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR