அமெரிக்காவுடனான கனடாவின் எல்லையில் ஒரு குழந்தை உட்பட நான்கு இந்திய பிரஜைகள் உறைந்து போய் இறந்ததாக பல ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளின் எல்லையில் சிலர் சிக்கி இறந்திருப்பது, இதில், மனித கடத்தல் நடவடிக்கையின் பங்கை தெளிவாகக் காட்டுகின்றது.
இறந்த நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் எல்லையில் சிக்கியிருந்த ஒரு பெரிய குழுவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. பனிப்புயல் போன்ற சூழ்நிலையில், பனி மூடிய வயல்களில் நடந்து அமெரிக்காவிற்குள் நுழைய இவர்கள் முயன்றுள்ளதும் தெளிவாகத் தெரிகின்றது. இந்த நால்வரும் ஒரு சிறிய விவசாய சமூகமான எமர்சனுக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் இறந்தனர்.
அப்பகுதியில் தங்குமிடம் எதுவும் இல்லை என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சம்பவம் குறித்த தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இரு நாடுகளிலும் உள்ள தூதர்கள் இந்த நிலைமைக்கு அவசரமாக பதிலளிக்க வேண்டும் என்றும் கெட்டுக் கொண்டார்.
அமெரிக்காவுக்கான (America) இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, இது ஒரு துரதிர்ஷ்டவசமான மற்றும் சோகமான சம்பவம் என்று விவரித்துள்ளார்.
ALSO READ | Airstrike on Yemen: சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கை! ஏமனில் 70 பேர் பலி!
"அவர்களின் தற்போதைய விசாரணையில் நாங்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். @IndiainChicago வில் இருந்து தூதரக குழு ஒன்று இன்று மின்னசோட்டாவிற்கு பயணித்து, தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து வழங்க உள்ளது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
An unfortunate and tragic incident. We are in touch with US authorities on their ongoing investigation. A consular team from @IndiainChicago is travelling today to Minnesota to coordinate and provide any assistance required https://t.co/syyA59EoB2
— Taranjit Singh Sandhu (@SandhuTaranjitS) January 21, 2022
கனடாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஜய் பிசாரியா இந்த சம்பவத்தை ஒரு "கடுமையான சோக சம்பவம்" என்று விவரித்துள்ளார்.
"இந்திய தூதரக குழு ஒன்று இன்று @IndiainToronto இலிருந்து மனிடோபாவிற்கு சென்று ஒருங்கிணைக்கும், உதவும் பணிகளில் ஈடுபட பயணிக்கிறது. இந்த குழப்பமான நிகழ்வுகளை விசாரிக்க கனேடிய அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்," என்று அவர் கூறியுள்ளார்.
இது மனதை கலங்கச்செய்யும் ஒரு சம்பவம் என்றும் அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தனது நாடு முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
"இது முற்றிலும் மனதை கலங்கச்செய்யும் சம்பவம். மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு இப்படி ஒரு குடும்பம் இறந்திருப்பது வருத்தத்தை அளிக்கின்றது. தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற அவர்களது கனவை பலர் தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள்" என்று ட்ரூடோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"இதன் காரணமாகத்தான், மக்கள் ஒழுங்கற்ற அல்லது சட்டவிரோதமான முறையில் எல்லையை கடப்பதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மனித கடத்தலை நிறுத்தவும், நாட்டுக்குள் நுழைய அபாயங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவவும் கனடாவும் அமெரிக்காவும் மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாக ட்ரூடோ மேலும் கூறினார்.
ALSO READ | தாய்லாந்து போகப்போறீங்களா? உங்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR