தலைவிரித்தாடும் தானியபற்றாகுறை; அரிசிக்காக இந்தியாவிடம் கை ஏந்தும் சீனா..!!!
சீனா, 30 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவிடமிருந்து இருந்து 9 கோடி கிலோ அரிசியை இறக்குமதி செய்துள்ளது, அதாவது, சீனா எல்லையில் இந்தியாவுடன் பிரச்சனை செய்து வரும் அதே நேரத்தில், தனது குடிமக்களுக்கு உணவளிக்க இந்தியாவிடன் சரண்டைந்துள்ளது. நமது விவசாயிகள் எல்லையில் சண்டையிடுவதில்லை. ஆனால் எதிரிக்கு நமது நட்டின் வலைமையை உணர்த்தியுள்ளனர்.
புதுடெல்லி: சீனா, 30 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவிடமிருந்து இருந்து 9 கோடி கிலோ அரிசியை இறக்குமதி செய்துள்ளது, அதாவது, சீனா எல்லையில் இந்தியாவுடன் பிரச்சனை செய்து வரும் அதே நேரத்தில், தனது குடிமக்களுக்கு உணவளிக்க இந்தியாவிடன் சரண்டைந்துள்ளது. நமது விவசாயிகள் எல்லையில் சண்டையிடுவதில்லை. ஆனால் எதிரிக்கு நமது நட்டின் வலைமையை உணர்த்தியுள்ளனர்.
இந்த செய்தி சில காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது
- உலகிலேயே அதிக அரிசியை இந்தியா ( India) ஏற்றுமதி செய்கிறது. அதே நேரத்தில் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக சீனா உள்ளது. இருப்பினும், இதுவரை சீனா இந்தியாவின் அரிசியை இறக்குமதி செய்யவில்லை. இந்திய அரசி தரமுள்ள அரசி அல்ல என கூறி வந்தது.
- இப்போது இந்திய வர்த்தகர்கள் 9 கோடி கிலோ அரிசியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் செலவு சுமார் 221 கோடி.
- சீனா சுமார் 143 கோடி மக்கள் தொகைகொண்டது. ஆனால் அதன் விவசாயிகளால் போதுமான தானியங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை, எனவே சீனா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 கோடி கிலோ அரிசியை இறக்குமதி செய்கிறது.
சீன மக்கள் அரிசி அல்லது சீன நூடுல்ஸை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீனாவில் ஒவ்வொரு 4 பேரில் 3 பேருக்கு அரிசி பிரதான உணவாகும். எனவே, சீனா (China) பெரிய அளவில் அரிசியை இறக்குமதி செய்கிறது. இந்திய விவசாயிகள் குறைந்த விலையில் அதிக அரிசியை உற்பத்தி செய்கிறார்கள், இதனால் உலகில் குறைந்த விலையில் அரிசியை விற்க முடியும். இந்த நேரத்தில் சீனாவின் தேவை மலிவான தானியமாகும்.
அரிசி இறக்குமதி செய்ய சீனா இதுவரை தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், பாகிஸ்தான் (Pakistan) போன்ற நாடுகளை நம்பியுள்ளது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, உலகின் பல நாடுகள் தானிய நெருக்கடிக்கு ஏற்படுமோ, பயந்து அதன் ஏற்றுமதியை தடை செய்துள்ளன, இந்த முடிவு சீனாவுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க | மீனவர் கையில் சிக்கிய புதையல்... திமிங்கிலத்தின் வாந்திக்கு ₹25 கோடியாம்..!!!
இந்தியாவிடமிருந்து மட்டுமல்ல, சீனா கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்காவிலிருந்தும் ,40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்துள்ளது. இப்போது சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் (America) இடையிலான உறவு நன்றாக இல்லை, என்பதால் சீனாவின் பிரச்சனை அதிகரித்துள்ளது
ஒருபுறம், சீனா உலகம் முழுவதிலுமிருந்து அரிசி இறக்குமதி செய்கிறது. ஆனால் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் இந்த ஆண்டு ஒரு அற்புதமான நெல் விளைச்சல் இருந்ததாக கூறியுள்ளது. சீனாவில் நெல் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருந்திருந்தால், சீனா ஏன் தொடர்ந்து அரிசி இறக்குமதி செய்கிறது. அதாவது, இது போன்ற பிரச்சாரத்தை பரப்புவதன் மூலம் சீனா தனது தானிய நெருக்கடியை மறைக்க விரும்புகிறது.
சில நாட்களுக்கு முன்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) சீன குடிமக்களிடம் உணவை வீணாக்க வேண்டாம் என்று கூறினார். உணவு தானியங்களை வீணடிப்பது எந்த நாட்டிற்கும் நல்லதல்ல. ஆனால் சீன அதிபர் இந்த கோரிக்கைக்கு பின்னால் இருந்த உண்மையான காரணம தானிய நெருக்கடியின் உண்மை நிலையை மறைப்பதாகும்.
தானிய நெருக்கடி குறித்து நாட்டு மக்களுக்குத் தெரிந்தால், சீனாவில் கலவரம் வெடிக்கக்கூடும், எனவும் ஜி ஜின்பிங்கின் செல்வாக்கு குறையக் கூடும் எனவும் என்று சீனாவின் அரசாங்கம் அஞ்சுகிறது.
சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளை இந்திய அரசு தொடர்ந்து தடை செய்து வரும் இந்த நேரத்தில், இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா எடுத்த முடிவிலிருந்து, அதன நெருக்கடி நிலையை அறிந்து கொள்ளலாம்.
சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி (Import) செய்வதற்கு பதிலாக, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்குமாறு ஊக்குவித்து வருகின்றன, மேலும் 6 மாதங்களுக்கும் மேலாக இந்திய ராணுவம் சீனாவுக்கு சவால் விடுகிறது. இந்நிலையில் இப்போது சீனா தனது மக்களுக்கு உணவளிக்க இந்தியாவிடமிருந்து உதவி பெற்று வருகிறது.
மேலும் படிக்க | உற்ற நண்பன் சீனா உதவியுடன் கிம் ஜாங் உன்னிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR