டெல்டா மாறுபாட்டால் சீனாவில் மீண்டும் தலைதூக்கி பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்
டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்ட சமீபத்திய பரவல் அதிகரிப்பு சீன அதிகாரிகளை பிரச்சனைக்கு ஆளாக்கியுள்ளது.
பீஜிங்: டெல்டா மாறுபாட்டால் தூண்டப்பட்ட சமீபத்திய கோவிட் -19 தொற்று, சீனாவில் 20 மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் 40 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவியுள்ளது. கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ் முதன்முதலில் 2019 டிசம்பரில் சீனாவின் வுஹானில் கண்டறியப்பட்டது.
சீனாவில், திடீரென தொற்றின் அளவு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களில் அதிகரித்து வருகிறது.
செவ்வாயன்று, சீனாவில் (China) 43 பேர் புதிதாக புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான ஜீரோ-கோவிட் செயலுத்தியை பின்பற்றி வருகின்றனர். எல்லைகள் முழு கட்டுப்பாட்டுடன் மூடப்பட்டுள்ளன. ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு கடுமையான தனிமைப்படுத்தல்கள் அமல்படுத்தப்படுகின்றன.
இவற்றின் காரணமாக, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகின்றது.
இருப்பினும், டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்ட சமீபத்திய பரவல் அதிகரிப்பு சீன அதிகாரிகளை பிரச்சனைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கான ஒரு உதாரணமாக, ரஷ்யாவின் எல்லையில் உள்ள வட சீனாவில் உள்ள நகரமான ஹெய்ஹேவில் உள்ள அதிகாரிகள், சமீபத்திய COVID-19 தொற்றின் மூலத்தைப் பற்றிய தகவல்களுக்கு 100,000 யுவானை (USD 15,500) வெகுமதியாக அறிவித்துள்ளனர்.
ALSO READ:சீனாவின் இம்சையால் கடுப்பான Yahoo, மிக பெரிய முடிவை எடுத்தது நிறுவனம்
கடந்த சில மாதங்களில் சீனாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கோவிட் மீள் எழுச்சியைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள "மக்கள் போரின்" ஒரு பகுதியாக வெகுமதி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த வைரஸ் பரவலின் மூலத்தை விரைவில் கண்டறியவும், பரவும் சங்கிலியைக் கண்டறியவும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான மக்கள் போரை நடத்துவது அவசியம்" என்று நகர அரசாங்கம் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
கடத்தல், சட்டவிரோதமாக நடக்கும் வேட்டைகள் மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடித்தல் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பற்றி அறிந்தால், அவற்றைப் பற்றி விரைவாகப் புகாரளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆன்லைனில் வாங்கப்படும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் உடனடியாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் கோவிட் -19 தொற்றுநோய் மீண்டும் அதிகரித்ததன் காரணமாக சீனாவில் மில்லியன் கணக்கானவர்கள் ஊரடங்கு (Lockdown) நிபந்தனைகளின் கீழ் மீண்டும் தள்ளப்பட்டார்கள். உள்நாட்டுப் பயணம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், பல விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ALSO READ:பாகிஸ்தானின் விநோத சட்டங்கள்; மக்கள் எப்படித் தான் வாழ்கிறார்களோ..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR