சீனாவில் வேகமாக பரவும் கொரோனா, மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு..!!

சீனாவில் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 26, 2021, 05:14 PM IST
சீனாவில் வேகமாக பரவும் கொரோனா,  மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு..!! title=

கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு விட்டதாக சீனா கூறி வந்த நிலையில், தற்போது, 11 மாகாணங்களில் COVID-19 தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால் சீனா மீண்டும் புதிய லாக்டவுனை விதித்துள்ளது. சீனாவில்  கடந்த வாரத்தில் 11 மாகாணங்களில் 100 க்கும் மேற்பட்ட  தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவில் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன

சீனாவில், தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக, சிஎன்என் தெரிவித்துள்ளது. சீனாவின் மக்கள்தொகையில் சுமார் 75 சதவிகிதம், அதாவது நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும்  தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

ALSO READ | Five Star Prison: கைதியானால், ‘இந்த’ சிறைச்சாலைகளில் கைதியாக இருக்க வேண்டும்...!

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய்களின் பரவலை தடுக்க கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. தொற்று நோய் பரவல் முதன்முதலில் அக்டோபர் 16 அன்று, கண்டறியப்பட்டது. வட கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்ட முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு தொற்று ஏற்பாடுள்ளது கண்டறியப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை வரை பதிவான 133 நோய்த்தொற்றுகளில், 106 பேர் 13 சுற்றுலாக் குழுவை சேர்ந்தவர்கள் என்று சீன சுகாதார துறை அதிகாரி தெரிவித்தார்.

நாட்டின் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. மங்கோலியா, கன்சு, நிங்சியா, குய்சோ மற்றும் பெய்ஜிங்கில் அதிக தொற்று பாதிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, சீன தலைநகரத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரியில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு நகரம் தயாராகும் நிலையில், பெய்ஜிங்கில் COVIDபரவலை கட்டுப்படுத்த , சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து அக்டோபர் 31 அன்று திட்டமிடப்பட்டிருந்த மாரத்தான் போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கான புதிய தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ALSO READ | இந்தியாவை களங்கப்படுத்த பாகிஸ்தான் - ISI தீட்டிய சதி திட்டம் அம்பலம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News