வாஷிங்டன்: சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு சீன அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவை எச்சரித்துள்ளார். சீனாவில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று பைடன் கூறினார். அதற்கு சீனா உலகுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் பைடன் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பைடன், பெய்ஜிங் மனித உரிமை மீறலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார்.


சீனாவுக்கும் இதன் விளைவுகளைப் பற்றி தெரியும்


சி.என்.என் இல் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ஜோ பைடன், “சிறுபான்மையினரை சீனா நடத்தும் விதம், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது சீனாவுக்கும் (China) நன்றாகத் தெரியும்.” என்று கூறினார். மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதில் அமெரிக்கா தனது உலகளாவிய பங்கை வகிக்கும் என்றும், சீனாவில் நடக்கும் அட்டூழியங்களை கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.


தொலைபேசியிலும் சீன அதிபருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது


சீனா உலகத்தின் தலைமை நாடாக மாற விரும்புகிறது என்றும், அதற்கான அந்த நாடு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருகிறது என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார். சீன அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முரணான செயலை நிறுத்தாவிட்டால், அது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பைடன் கூறினார்.


ALSO READ: கண்ணும் கருத்துமாக இல்லையென்றால் சீனா நம் உணவை பறித்துக்கொள்ளும்: Joe Biden


“மனித உரிமை மீறல்களை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது.” என்றார் ஜோ பைடன். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தொலைபேசி உரையாடலில், உய்குர் முஸ்லிம்கள் மீது நடக்கும் அட்டூழியங்கள் தொடர்பான பிரச்சினையையும் பைடன் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகளை சீனா மதிக்க வேண்டும் என்று ஜோ பைடன் (Joe Biden) தெளிவுபடுத்தினார்.


உட்சுலும் இலக்கில் உள்ளது


முஸ்லிம்களை அழிக்க சீனா ஒரு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. உய்குர் முஸ்லிம்களுடன் (Uighur Muslims) சேர்ந்து, ஹைனான் மாகாணத்தில் சான்யாவில் வசிக்கும் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட உட்சுல் முஸ்லிம்களுக்கும் சீனா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய இலக்கு பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட உல்சூல் முஸ்லிம்கள் என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) அறிக்கை கூறுகிறது.


சீன அரசாங்கம் அவர்களது மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றி விட்டது. குழந்தைகள் அரபு மொழியைப் படிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. சன்யா நகரமான ஹைனானில் பல மாற்றங்களும் தடைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்க கொள்கைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது.


ALSO READ: டொனால்ட் டிரம்ப் Twitter கணக்கிற்கு நிரந்திர தடையா.. உண்மை நிலை என்ன..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR