கண்ணும் கருத்துமாக இல்லையென்றால் சீனா நம் உணவை பறித்துக்கொள்ளும்: Joe Biden

இரு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஆயுதங்கள் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பேசினர் என்று வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2021, 07:03 PM IST
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் இடையிலான தொலைபேசி அழைப்பு.
  • சின்ஜியாங், ஹாங்காங்கில் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து பைடன் பேசினார்.
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஆயுதங்கள் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும் தலைவர்கள் பேசினர்.
கண்ணும் கருத்துமாக இல்லையென்றால் சீனா நம் உணவை பறித்துக்கொள்ளும்: Joe Biden title=

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நோக்கங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு தொலைபேசி அழைப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்த தொலைபேசி அழைப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து சில விஷயங்களே வெளி வந்துள்ளன. எனினும், இந்த தொலைபேசி அழைப்புக்கு பிறகு ஜோ பைடன் கூறிய ஒரு வரி, விசித்திரமாக உள்ளது.

தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அவர் அமெரிக்க இராணுவப் படைகளுக்கு, “கண்ணும் கருத்துமாக இருங்கள், இல்லையெனில் சீனா நம் உணவை எடுத்துக்கொள்ளும்” என்று செய்தி அளித்துள்ளார்.

"நாம் நமது பணிகளில் கண்ணும் கருத்துமாக இருக்கவில்லை என்றால், அவர்கள் நமது மதிய உணவை சாப்பிடப் போகிறார்கள்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) செய்தியாளர்களிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் சீன அதபர் ஜின்பிங்குடன் (Xi Jinping) ஜோ பைடன் முதல் முறையாக புதன்கிழமையன்று பேசினார். அப்போது அவர் சின்ஜியாங், ஹாங்காங்கில் மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிற விஷயங்களில் அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது.

ALSO READ: டொனால்ட் டிரம்ப் Twitter கணக்கிற்கு நிரந்திர தடையா.. உண்மை நிலை என்ன..!!!

“பெய்ஜிங்கின் கட்டாய மற்றும் நியாயமற்ற பொருளாதார நடைமுறைகள், ஹாங்காங்கில் ஒடுக்குமுறை, ஹாங்காங்கில் நடக்கும் அடாவடித்தனம், சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தைவான் மற்றும் அந்த பிராந்தியத்தில் பெருகி வரும் சீனாவின் ஆதிக்கம் ஆகியவை குறித்து அதிபர் பைடன் அடிக்கோடிட்டுக் காட்டினார்” என்று வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு பின்னர் தெரிவித்தது.

இரு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஆயுதங்கள் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பேசினர் என்று வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்த தொலைபேசி அழைப்பில் அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, செழிப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதும், "தடையற்ற மற்றும் அனைவருக்குமான இந்தோ-பசிபிக்" பிராந்தியத்தை பாதுகாப்பதும் தனது முன்னுரிமைகள் என்று கூறினார்.

இந்த பிராந்தியத்தில் சீனாவின் (China) விரிவாக்க அணுகுமுறை குறித்து பல நாடுகள் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளதால் இந்தோ-பசிபிக் குறித்த கருத்துக்கள் இப்போது வெளிவந்துள்ளன.

"அமெரிக்க மக்கள் மற்றும் நட்பு நாடுகளின் நலன்களை முன்னேற்றும் பணிகளுக்காக நடைமுறைக்கு ஏற்ற, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத் தொடர அதிபர் பைடன் உறுதிபூண்டுள்ளார்" என்று வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்தது.

ALSO READ: Border Tension: பாங்காங் ஏரி பகுதியில் இருந்து துருப்புக்கள் வெளியேறுகின்றன

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News