சீனா தைவான் உறவுகள்: சீனாவில் இருந்து வெறும் 100 மைல் தொலைவில் உள்ள சிறு தீவு நாடான தைவான் 17ம் நூற்றாண்டில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1895ஆம் ஆண்டு ஜப்பானுடன் ஏற்பட்ட போரில் தோற்றதால், ஜப்பானுக்கு கைமாறிய தைவான், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்றதை அடுத்து 1945ம் ஆண்டு, மீண்டும் தைவான் தீவு  சீனா வசம் சென்றது. பின்னர் சீனாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த நிலையில் 1949ஆம் ஆண்டு தைவான் தங்களை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை தைவான் தனது ஒருங்கிணைந்த அங்கம் என்றே சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் உலகின்13 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா vs தைவான்


இந்நிலையில், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. கூட்டு பயிற்சிக்குப் பிறகு, தைவான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இதற்கிடையில், தைவான் தீவைச் சுற்றி ரோந்து மற்றும் பயிற்சிகள் தொடர்பான அனைத்து முக்கியமான ஏற்பாடுகளையும் மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்கு தியேட்டர் கட்டளை பிரிவு நடைமுறைப்படுத்தியுள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் ஆதரவு


உலகளவில் கணினி சிப் தயாரிப்பில் 65 விழுக்காடு அளவு தைவானில் இருந்து மட்டுமே கிடைக்கும் நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதோடு தைவானுக்கு தேவையான ஆயுதங்களையும் அமெரிக்கா கொடுத்து உதவியும் வருகிறது.


தைவான் அதிபரின் அமெரிக்க பயணம்


சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்க சபாநாயகர் தைவான் வந்ததால் ஏற்கனவே கடும் கோபத்தில் சீனா இருந்த நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக தைவான் அதிபர் சாய் இங் வென் (Tsai Ing-wen) அண்மையில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டதால், ஆத்திரமடைந்த சீனா, தைவானின் அருகே  தனது 9 போர்க்கப்பல்களை நிறுத்தியும், 70க்கும் மேற்பட்ட போர்விமானங்களை அனுப்பியும் தைவானை மிரட்டி வருகிறது.


தைவான் ஜலசந்தியில் சீன போர்க்கப்பல்கள் 


தைவான் மீது அழுத்தம் கொடுக்க, சீன போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தியில் இன்னும் உள்ளன. செவ்வாயன்று, இந்த போர்க்கப்பல்கள் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியை மேற்கொண்டன. இதற்கு முன்னும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன், தைவான் பேச்சு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனா போர்  கப்பல்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மதுவிற்கு அடிமையான ‘குடிகார’ நாய்!  ‘சரக்கு’ கிடைக்காமல் தவிப்பு!


தைவான் தலைவணங்கத் தயாராக இல்லை


மறுபுறம், தைவானும் தலைவணங்கத் தயாராக இல்லை, அதன் விமானப்படை தனது வலிமையை வெளிப்படுத்தியது. தைவான் ஜலசந்தியில் பறந்த, தைவானின் போர் விமானங்கள், சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் கொண்டவை என்பதை நிரூபித்துள்ளன. தைவானின் வடக்கே, சீனாவின் எல்லைக்கு மிக அருகில் உள்ள Hsinchu விமான தளத்தில் தைவான் மிராஜ் போர் விமானங்களின் மூன்று படைப்பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது.


'நாட்டை ராணுவம் பாதுகாக்கும்'


தைவான் அதிபர் சாய் இங் வென், “சீனாவின் ராணுவப் பயிற்சிகள் முடிவடைந்தாலும்,  எங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுக்கள் தங்கள் நிலைகளில் இருந்து கொண்டு நாட்டைப் பாதுகாக்கும்” என்றார். அதிபர் சாய் இங் வென், பெய்ஜிங்கை குறிவைத்து, 'சீனா இராணுவ பயிற்சிகளை நடத்திய நிலையில், தைவானிலும் பிராந்தியத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் இருக்கும் ஒரு பெரிய நாடு மிகவும் பொறுப்பற்ற முறையின் நடந்து கொண்டுள்ளது என்றார்.


மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ