உலகின் மிகவும் குளிரான இடம்: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மலைப்பாங்கான பள்ளத்தாக்குகளைத் தவிர, வட இந்தியாவில் உள்ள மக்கள் குறைந்தபட்ச தட்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸை அடைந்து வரும் நிலையில் மிகவும் சிரமப்ப்டுகிறார்கள்.   உலகில் ஒரு நாட்டில் ஒரு கிராமத்தில் வெப்பநிலை -51 டிகிரியாக உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே மிகவும் குளிரான இடம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

-51 டிகிரி செல்சியஸில் சவால்கள் நிறைந்த வாழ்க்கை


அண்டார்டிகாவுக்கு வெளியே ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள உள்ளது உலகின் மிக குளிரான இடமான ஓமியாகான் (Oymyakon) கிராமம். இங்குள்ள சராசரி வெப்பநிலை -50 டிகிரி ஆகும். குளிரில், இங்குள்ள மக்களின் நிலை பரிதாபகரமாகிறது. இங்கே எந்த பயிர்களும் வளராத அளவுக்கு இங்குள்ள குளிர் நிலைமை உள்ளது. மக்கள் பெரும்பாலும் மாமிசம் அதாவது அசைவம் சாப்பிடுவதன் மூலம் உயிர்வாழ்கிறார்கள். ரஷ்ய ஊடக அறிக்கைகளின்படி, 1924 ஆம் ஆண்டில், இந்த இடத்தின் வெப்பநிலை -71.2 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது.


கிராமத்தின் மக்கள் தொகை 500 


2018 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு சுமார் 500 மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் எப்போதும் உறைபனியில் வாழ்கின்றனர் உள்ளனர். முன்னதாக இந்த இடத்தில் உள்ள மக்கள் தொகை 900 என்று கூறப்பட்டாலும், அன்றாட வாழ்க்கை சவால்களுக்கு மத்தியில் இப்பகுதியை விட்டு பலர் வெளியேறினர்.


மேலும் படிக்க | பற்றி எரியும் பிரேசில்... இன்னொரு இலங்கையாகும் அச்சம்!


10 மணிக்கு உதயமாகும் சூரியன் 


குளிர்காலத்தில், இங்குள்ள குழந்தைகள் -50 டிகிரி வெப்பநிலை வரை இருந்தால் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள். அதனை விட குறைவாக இருக்கும் போது பள்ளிகளும் மூடப்பட்டுவிடும். இங்குள்ள வெப்பநிலைக்கு ஏற்ப குழந்தைகள் பாதுகாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் குளிரைத் தவிர்ப்பதற்காக மைனஸ் 56 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருந்தால் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குளிர்காலத்தில் பகல் வெப்பநிலை -45 முதல் -50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், நிர்வாகம் அனைவருக்கும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளை நடத்தி வருகிறது.


இங்கே, கலைமான் மற்றும் குதிரை மாமிசத்துடன் கூடவே, ஏராளமான ஸ்ட்ரோக்னினா மீன்களை உட்கொள்கிறார்கள். இங்கு டிசம்பர் மாதத்தில் சூரியன் 10 மணிக்கு உதயமாகிறது. அதனால்தான் சவால் மிக்க வாழ்க்கை முறையினால் மக்கள் தங்களையும், தங்கள் குழந்தைளையும் மிகவும் எச்சரிக்கையாக காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது. 


மேலும் படிக்க | கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்! பாகிஸ்தானின் அவல நிலையை காட்டும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ