பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு UAE புதிய விசாக்களை கொடுக்க மறுக்கும் காரணம் என்ன?
பாகிஸ்தான், இரான், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 13 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்களுக்கு புதிய விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளதாக அரசுக்கு சொந்தமான business park வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், இரான், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 13 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்களுக்கு புதிய விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளதாக அரசுக்கு சொந்தமான business park வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
business parkஇல் இயங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆவணத்தை ராய்ட்டர்ஸ் (Reuters) நேரடியாக பார்த்து உறுதி செய்துள்ளது. நவம்பர் 18 முதல் நடைமுறைக்கு வந்த குடியேற்ற சுற்றறிக்கை (immigration circular) இந்த அறிவுறுத்தல் இடம் பெற்றுள்ளது. காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் ஏமன் உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களுக்கு விசாவும், புதிய வேலைவாய்ப்புகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விசா தடையானது, அல்ஜீரியா, கென்யா, ஈராக், லெபனான், துனிசியா மற்றும் துருக்கி குடிமக்களுக்கும் பொருந்தும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடைக்கு ஏதேனும் விதிவிலக்குகள் உள்ளதா என்பது பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையத்தை (UAE’s Federal Authority for Identity and Citizenship) ராய்ட்டர்ஸ் தொடர்பு கொண்டபோது அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.
பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் பல நாடுகளின் குடிமக்களுக்கு புதிய விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ராய்ட்டர்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.
விசா தடைக்கான காரணம் என்னவென்று ஆதாரம் தெரியவில்லை என்றாலும், இந்தத் தடை குறுகிய காலத்திற்கே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களுக்கும் வேறு சில நாடுகளுக்கும் புதிய விசாக்களை வழங்குவதை நிறுத்தியதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.
விசா கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து காரணம் கேட்டிருப்பதாக கூறும் பாகிஸ்தான், இந்த விசாத் தடை கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.
செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகளால் பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறும் பாகிஸ்தான், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள்ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்லலாம் என்றும் பாகிஸ்தான் அமைச்சகம் கூறுகிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR